உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அ.தி.மு.க., - ஐ.டி., அணியினருடன் பழனிசாமி ஆலோசனை

 அ.தி.மு.க., - ஐ.டி., அணியினருடன் பழனிசாமி ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க., - ஐ.டி., அணியின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நடந்த கூட்டத்தில், ஐ.டி., அணி செயலர் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், யு -டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும், அ.தி.மு.க., - ஐ.டி., அணி செயல்பாடு, சட்டசபை தேர்தலையொட்டி செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. 'சட்டசபை தேர்தல் வருவதால், தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை உடனுக்குடன் முறியடிக்க வேண்டும். தி.மு.க., அரசின் தவறுகளை, சட்டம் -- ஒழுங்கு சீர்கேட்டை, ஊழல், முறைகேடுகளை, மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில், கார்ட்டூன்களாக, ரீல்ஸ்களாக, துணுக்கு செய்திகளாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்' என, பழனிசாமி அறிவுரை வழங்கினார். கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நடந்த ஐ.டி., அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஐ.டி., அணி தலை வராக இருக்கும் கோவை சத்யன் பங்கேற்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை