உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வில் இருந்து செந்தில் பாலாஜி வெளியேறிய காரணத்தை கூறிய பழனிசாமி

அ.தி.மு.க.,வில் இருந்து செந்தில் பாலாஜி வெளியேறிய காரணத்தை கூறிய பழனிசாமி

கரூர்: ‘‘நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், த.வெ.க.,’’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடுமையாக விமர்சித்துள்ளார். கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பங்கேற்று, பழனிசாமி பேசியதாவது: கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, செல்லப்பிள்ளை மாதிரி வைத்திருந்தோம். அமைச்சராக இருந்தபோது, ரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சியாக, தன்னை மட்டும் வளர்த்து கொண்டார். தற்போது, சுயநலம், அதிகார போதையால், த.வெ.க.,வுக்கு சென்று விட்டார். கரூரில், நம்முடன் முன்பு செந்தில் பாலாஜி இருந்தார். கடந்த 2017ல், முதல்வர் அறையில் நான் இருந்போது, தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் உடன் இருந்தனர். அப்போது, செந்தில்பாலாஜி என்னிடம் வந்து, சில கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டார். விஜயபாஸ்கர், கோரிக்கையை நிறைவேற்றவே விடவில்லை. உடனே, செந்தில்பாலாஜி, அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார். தற்போதைய துரோகி விஜயபாஸ்கரால், அப்போது செந்தில் பாலாஜி போனார். விஜயபாஸ்கர் சம்மதித்து இருந்தால், அ.தி.மு.க.,விலேயே செந்தில் பாலாஜி இருந்திருப்பார். அவர், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து விட்டார். ஆனாலும், அவர் சேர்ந்த இடத்தில் விசுவாசமாகத்தான் இருக்கிறார். தமிழகத்தில், 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வை, ‘தீர்ந்துபோன கட்சி’ என, முதல்வர் விஜய் விமர்சனம் செய்கிறார். சூழ்நிலையால், அவர் முதல்வராகி விட்டார். த.வெ.க., நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். ஆறு மாத த.வெ.க., ஆட்சியில் பெண் அதிகாரிக்கு கூட பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க., தான், வழக்கு போட்டு, த.வெ.க., – எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வைத்தது. த.வெ.க., அரசில், ஒரு லட்சத்து, 25,000 கோடி ரூபாய் கடன் வாங்க போகின்றனர். இந்த கடன், மக்கள் தலையில், வரியாக வந்து விழப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார். பின், பேட்டியளித்த பழனிசாமி, “தொகுதி மறுவரையறையால், தமிழகத்தில் தொகுதி எண்ணிக்கை குறையாது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அ.தி.மு.க., ஏற்கனவே ஆதரித்துள்ளது. தமிழகத்தில் லோக்சபா எம்.பி., தொகுதி எண்ணிக்கை 59 ஆக உயரும் என்பதால், தி.மு.க., ஆதரவு அளித்து இருக்கலாம். மசோதாவை ஆதரிக்கா விட்டால், தொகுதி எண்ணிக்கை குறையும் ஆபத்து உள்ளது,” என்றார். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்