பழனிசாமி கூறும் பிரமாண்ட கட்சி டிரம்ப் கட்சியாக இருக்கும்
அ.தி.மு.க., உடன் கூட்டணி சேர, கட்சிகள் வரவேற்கப்படுகின்றன என விளம்பரம் கொடுக்காத குறையாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசி வருகிறார். பிரமாண்ட கட்சி என அவர் கூறுவதைப்பார்த்தால், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ரிபப்ளிக் பார்ட்டி' போன்ற கட்சிகள் இணையலாம் என நினைக்கிறேன். தன் பிரசார பயணத்துக்கு, அழைத்து வரப்படும் கூட்டத்தை பார்த்து, பழனிசாமியே மகிழ்ந்து கொள்கிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளதை, அ.தி.மு.க., தொண்டர்களே ஏற்கவில்லை. அ.தி.மு.க., கூட்டணியை வலுப்படுத்தவே விஜயை கூட்டணிக்கு அழைக்கின்றனர். விஜய், தன்னை முதல்வர் வேட்பாளராக பிரகடனம் செய்து வருகிறார். அவர் அ.தி.மு.க., கூட்டணியில் இணைவார் என்று நம்பிக்கையில்லை. - கார்த்தி, காங்கிரஸ் எம்.பி.,