உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முடிவை பழனிசாமி எடுப்பார்: மழுப்பி நழுவிய ஜெயகுமார்

 முடிவை பழனிசாமி எடுப்பார்: மழுப்பி நழுவிய ஜெயகுமார்

சென்னை: ''பன்னீர்செல்வம், தினகரன் நிலைப்பாடு குறித்து, பழனிசாமி முடிவு செய்வார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. அதேபோலத்தான், அ.தி.மு.க.,வும் அழிக்க முடியாத இயக்கம். பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர், அவர்களின் நிலைப்பாட்டை எடுக்கின்றனர். அதை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பதை, பழனிசாமி முடிவு செய்வார். நான் கருத்து கூற முடியாது. பன்னீர்செல்வம் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., பூமாலை கிடையாது. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். உதிர்ந்த செங்கல்கள் குறித்து பேச விரும்பவில்லை. நுாறு நாள் வேலை திட்டத்தில், காந்தி பெயரை மாற்றக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு. அதிலுள்ள கெடுபிடிகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இத்திட்டத்தை முழுமையாக சிதைக்காமல், உள்ளபடி இருந்தால், அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, முன்பு கடுமையாக விமர்சித்தீர்கள். தற்போது அவர் குறித்து கேட்டால் அமைதியாகி விடுகிறீர்களே என்ற கேள்விக்கு, ''தேவைப்பட்டால் கடுமையாக விமர்சிப்பேன்; தேவைப்படாதபோது, விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை,'' எனக் கூறி நழுவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை