உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கூட்டு தலைமைக்கு கிடைத்த வெற்றி: பீஹார் தேர்தல் குறித்து பழனிசாமி கருத்து

 கூட்டு தலைமைக்கு கிடைத்த வெற்றி: பீஹார் தேர்தல் குறித்து பழனிசாமி கருத்து

சென்னை: 'பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த அபார வெற்றி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் கூட்டு தலைமைக்கு கிடைத்த வெற்றி' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியின் பொய்களையும், ஜனநாயகத்தை காக்கும் அமைப்புகளை, குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளை நிராகரித்து, அம்மாநில மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின், கூட்டுத் தலைமை மீது, பீஹார் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை, இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அம்மாநில அமைச்சர்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலுவான வெற்றி, பீஹாரின் முன்னேற்றத்தையும், பொது நலனையும் மேலும் வேகப்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி