உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மூன்று நாட்கள் பழனிசாமி பிரசாரம்

 மூன்று நாட்கள் பழனிசாமி பிரசாரம்

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். வரும் 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், சோழிங்கநல்லுார் தொகுதிகளில், அவர் பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 29ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளில், பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து 30ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி தொகுதியில், தனது பிரசாரத்தை பழனிசாமி மேற்கொள்ள உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ