வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கூட்டணிக்கு வேட்டு வெக்காம இருந்தீன சரி
மதுரை: ''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் எழுச்சி பயணத்திற்கு பிரதமர் மோடியின் ஆசியும், வாழ்த்துகளும் உண்டு'' என பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று மாலை தரிசனம் செய்துவிட்டு அவர் கூறியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்த விஷயத்தில் அனைத்தையும் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்க்காதீர்கள். பழனிசாமிதான் கூட்டணியின் தமிழக தலைவர். அவர் தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி 2026 தேர்தலை சந்திக்க உள்ளது. பழனிசாமியின் எழுச்சி பயணத்திற்கு தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். வரும் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். பழனிசாமியின் எழுச்சி பயணத்திற்கு பிரதமர் மோடியின் ஆசியும் வாழ்த்துகளும் உள்ளது. கூட்டணியில் பன்னீர்செல்வத்திற்கான முக்கியத்துவம் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும். இந்திய வரலாற்றில் நெடுநாட்கள் பிரதமர் பதவி வகித்த இந்திராவின் சாதனையை தாண்டி பிரதமர் மோடி இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 4077 நாட்களாக பிரதமராக தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். இவ்வாறு கூறினார்.
கூட்டணிக்கு வேட்டு வெக்காம இருந்தீன சரி