உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலாறு நீர் பாசன கால்வாய் துார்வாரும் பணி தொடக்கம்

பாலாறு நீர் பாசன கால்வாய் துார்வாரும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே, பாலாறு நீர் பாசன கால்வாய் துார்வாரும் பணி, இன்று (நவ.,28) தொடங்கப்பட்டது. ஆலங்காயம் பஞ்.,க்கு உட்பட்ட ஜாப்ராபாத் பகுதி முதல், மேட்டுப்பாளையம் வழியாக, உதயேந்திரம் பேரூராட்சி வரை, இரண்டரை கி.மீ., துாரம் செல்லும், பாலாறு நீர் பாசன கால்வாய் துார்வாரப்படாததால், உதயேந்திரம் ஏரி, ஜாப்ராபாத் ஏரி, மேட்டுப்பாளையம் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த, 1,000 ஏக்கர் விவசாய பாசன நிலங்களுக்கு நீர்வரத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே, பாலாறு நீர் பாசன கால்வாயை துார்வார வேண்டும் என, பாலாறு பாதுகாப்பு கூட்டு இயக்கம் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இன்று, கலெக்டர் நல்லசிவன் இந்த கால்வாயை துார்வாரும் பணிக்கு அனுமதி அளித்து, தொடங்கி வைத்தார். இதனால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை