உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தன்மான உணர்வுள்ள திருமா அ.தி.மு.க.,வுடன் வர வேண்டும் அழைக்கிறார் பாண்டியராஜன்

தன்மான உணர்வுள்ள திருமா அ.தி.மு.க.,வுடன் வர வேண்டும் அழைக்கிறார் பாண்டியராஜன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, எல்லா கோவில்களுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபடுகிறார். முதல்வருக்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் எந்த மதத்திற்கும் ஆதரவாக இருக்கக்கூடாது.திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு முறையாக கையாண்டு இருந்தால் பிரச்னை பெரிதாக வளர்ந்திருக்காது. மதநல்லிணக்கம் இருந்த இடத்தில் பிரச்னையை வளரவிட்டு, இரு சமுதாயத்திற்கு இடையே பகை உணர்வு உருவாக தி.மு.க., தான் காரணம்.பழனியில் முருகன் மாநாடு அரசியல் நிகழ்வாக நடத்தப்பட்டது. ஆனால் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு அப்படி நடக்கவில்லை. வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., குறித்து இதுவரை நல்ல கருத்துக்களையே தெரிவித்துள்ளார். தன்மான உணர்வு உள்ள திருமாவளவன் போன்றோர் அ.தி.மு.க,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 23, 2025 09:25

இவ்வளவு நாள் இல்லாமல் தேவையில்லாத இவரின் அறிக்கையை வெளியிடுவதில் அவசியம் என்ன....!!!


Oviya Vijay
ஜூன் 23, 2025 07:14

2026 தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்த கையோடு நேராக நீங்களே திமுகவில் உங்களை இணைத்துக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதில் நீங்கள் அவர்கள் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியை உருவப் பார்க்கிறீர்களா... பலே... நடக்காது பாண்டியா...


பேசும் தமிழன்
ஜூன் 23, 2025 07:43

ஆசை.... தோசை... அப்பளம்.... வடை...... யாராவது தெரிந்தே தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொள்ள முன்வருவார்களா?? ஒருமுறை தமிழக மக்கள் ஏமாந்து விட்டார்கள்.. ஆனால் மறுபடியும்.... வாய்பில்லை ராஜா..... வாய்ப்பே இல்லை.


முருகன்
ஜூன் 23, 2025 07:08

யாரை கூப்பிட்டாலும் உமக்கு தோல்வி உறுதி அதனால் தான் திமுக கூட்டணியில் உள்ள அனைவரையும் தினமும் அழைத்து கொண்டு


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2025 07:05

ஒரு பிரியாணி தூக்கி போட்டீர்கள் என்றால் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை