உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ கவுன்சிலை ஏமாற்றும் அரசு பன்னீர் கண்டனம்

மருத்துவ கவுன்சிலை ஏமாற்றும் அரசு பன்னீர் கண்டனம்

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழகத்தில், சென்னை, கடலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில், அரசு பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இவற்றில், கடலுார், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில், போதிய பல் மருத்துவர்கள் இல்லை. இதனால், அந்த மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை, ஏன் ரத்து செய்யக் கூடாது என, இந்திய பல் மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டுள்ளது. இந்திய பல் மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டதை தொடர்ந்து, அரசு பல் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த, 27 பல் மருத்துவர்களை, கடலுார், புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு, தி.மு.க., அரசு இடமாற்றம் செய்துள்ளது. தி.மு.க., அரசு செய்த தவறுக்கு, பல் மருத்துவர்களை தண்டிப்பது நியாயமற்ற து. மேலும், இது இந்திய பல் மருத்துவ கவுன்சிலை ஏமாற்றும் செயல். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி