வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பழனிசாமி அதிமுகவை காலிசெய்துவிட்டார்
பழனிச்சாமி பிடிவாதத்தால் காத்திருந்த அதிமுக தொண்டர்கள் சிதறி போயிருப்பார்கள். இனி மேலும் காத்திருப்பது வீண் தான்.
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், நாளை நடக்க இருந்த, மாவட்ட செயலர்கள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' எனும் பெயரில், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து, பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், இருந்த பன்னீர் செல்வம், தற்போது அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்ததால் வெளியேறினா ர். இருப்பினும், கூட்டணிக்குள் மீண்டும் பன்னீர்செல்வத்தை கொண்டு வரும் முயற்சியில், பா.ஜ., ஈடுபட்டதாகவும், பழனிசாமி முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட் ட செயலர்கள் கூட்டம், கடந்த மாதம் 24ம் தேதி, சென்னையில் நடந்தது. அதில் பேசிய பன்னீர்செல்வம், 'டிச., 15ம் தேதி, மாவட்ட செயலர்கள் கூட்டம் நடத்தப்படும். அதில், முக்கிய முடிவு எடுக்க உள்ளோம்' என்றார். அதன்பின், கடந்த 3ல், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அவரது இல்லத்தில் பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது, 'அ.தி.மு.க.,வில் பிரிந்துள்ள சக்திகளை ஒன்றுசேர்க்க வேண்டும்' என வலியுறுத்தினார். அதற்கு, 'பொறுமையாக இருங்கள்; பழனிசாமியிடம் நான் பேசுகிறேன்' என, அமித் ஷா அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால், பன்னீர்செல்வம் அறிவித்தபடி, அவரது அணியின் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், அன்றைய தினம், அமித் ஷா சென்னை வர உள்ளதாக தக வல் வெளியாகி உள்ளது. அவர் வருவதால், அன்று நடக்கவிருந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, வரு ம் 22க்கு பன்னீர்செல்வம் தள்ளி வைத்துள்ளதா க கூறப்படுகிறது.
பழனிசாமி அதிமுகவை காலிசெய்துவிட்டார்
பழனிச்சாமி பிடிவாதத்தால் காத்திருந்த அதிமுக தொண்டர்கள் சிதறி போயிருப்பார்கள். இனி மேலும் காத்திருப்பது வீண் தான்.