உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனியும் தோல்வியை சந்திப்பார் பழனிசாமி: சாபம் விடுகிறார் பன்னீர்செல்வம்

இனியும் தோல்வியை சந்திப்பார் பழனிசாமி: சாபம் விடுகிறார் பன்னீர்செல்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தலைமை பண்புக்கான அறிகுறி துளியும் இல்லாத பழனிசாமியிடம், அ.தி.மு.க., சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க., ஒன்றிணைய முயற்சி செய்வோரை அவமதிக்கும் பழனிசாமி, இனியும் தொடர் தோல்வியையே சந்திப்பார்' என, சாபம்விடும் தொனியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமி -- -பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு தொடருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில் இருந்து அ.தி.மு.க., விலகிய நிலையில், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து பன்னீர்செல்வம் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

முடிந்த விஷயம்

தற்போது, பா.ஜ., உடன் மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமைத்ததையடுத்து, பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுகிறார். தமிழகம் வந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், பழனிசாமி அளித்த பேட்டியில், 'பன்னீர்செல்வம் விவகாரம் முடிந்தபோன விஷயம்' என கூறினார். இதனால், பழனிசாமியின் 'இமேஜை' உடைக்கும் வகையில், பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை: அறிவு, அனுபவம், மேலாண்மை, மனிதர்களை மதிக்கும் பண்பு சேர்ந்தது தான் தலைமை குணம். ஒரு சிறந்த தலைவர், அனைவர் துணையுடன், அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து, இயக்கத்தை திறம்பட நடத்துவார். மாறாக செயல்பட்டால், ஏளனத்திற்குரியவராக இருப்பார். ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை கொண்டவர்கள், தலைமை பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமை பண்புக்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம், அ.தி.மு.க., சிக்குண்டு கிடப்பதால், அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.உதாரணத்திற்கு, மதுரையில் பழனிசாமியின் காரில் ஏற முயன்ற முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். அது, செல்லுார் ராஜுவுக்கு அவமரியாதை.

அவமரியாதை

லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி., செய்தியாளர் சந்திப்பில், தன் கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது, அவரை அனுமதிக்கவில்லை. இது தம்பிதுரைக்கு மிகப்பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத் துவோர், அனைவரும் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகின்றனர். செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து எந்தவொரு செயலையும் செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதற்கு மாறாக எந்தச் செயலை செய்தாலும் அது படுதோல்வியில்தான் முடியும். இது பழனிசாமிக்கு பொருந்தும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SENTHIL NATHAN
ஆக 15, 2025 17:19

யாரை எதிர்த்து அம்மா சமாதியில் தியானம் செய்தார்? யாரை மறுபடியும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று புல்லுருவி வேலை செய்தார்.? செல்லாகாசாகி விட்டதால் பொறாமை கொண்டு மற்றவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பிதற்றுகிறார்.


mohana sundaram
ஆக 15, 2025 12:53

உங்களால் தான் அந்த கட்சி நாசமாக போனது. அண்ணாமலையை விலக வைத்தது துரோகி பழனிச்சாமிக்கு ஒரு பெரிய அடியை கொடுக்கும்.


mathavan
ஆக 15, 2025 11:28

எடுபுடி பழனிச்சாமி, ஆட்சியை பிடிக்க - 2017 ல் கூவத்துரில் செய்ததை மீண்டும் செய்யவும் தயாராக இருக்கிறார்,


Oviya Vijay
ஆக 15, 2025 08:59

தான் மறைந்தாலும் பல நூற்றாண்டுகள் கடந்தும் அதிமுக நிலைத்து நிற்கும்... இது ஜெயலலிதா அம்மையார் உதிர்த்த பொன்மொழி... அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு தான் கூறுவார்கள்... ஆனால் உண்மையில் நடப்பது என்ன... ஜெயலலிதாவோடு முடிந்து போனது அதிமுகவின் சகாப்தம்... தற்போது மிஞ்சி எஞ்சி இருப்பது அதன் எச்சம் மட்டுமே... ஓபிஸ் இபிஎஸ் தினகரன் சசிகலா அனைவருமே ஒன்றிணைந்தாலும் அதிமுக இனி மீண்டெழவோ பழைய நிலைக்குத் திரும்பவோ வாய்ப்பேயில்லை... அதே போல் திமுகவிற்கும் ஸ்டாலினுக்குப் பிறகு அஸ்தமனம் தான்.. கலைஞர் மற்றும் ஸ்டாலினுக்குக் கிடைக்கும் வரவேற்பு உதயநிதிக்கு இருக்காது.. ஸ்டாலின் காலத்திற்குப் பிறகு புதிய கட்சிகள் தலை தூக்க ஆரம்பிக்கும்.. தேசியக் கட்சி என்ற அளவில் பாஜகவிற்கும் இதே நிலை தான்... குஜராத் முதல்வராக அறியப்பட்ட மோடியை மீடியாக்கள் இந்திய அளவில் மிகப்பெரிய விளம்பரம் தேடிக்கொடுக்க தற்போது பிரதமர் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறார்... ஆனால் அவர் காலத்திற்குப் பின்னே???... இதை என்றேனும் நாம் யோசித்துப் பார்திருக்கிறோமா??? கடைசியில் பாஜகவும் மோடிக்குப் பின்னே படுகுழியில் வீழும்... வாஜ்பாய் மற்றும் மோடி அளவிற்கு ஒருவரை பாஜகவில் இனி அடையாளம் காட்ட முடியாது... அதற்கடுத்தத் தலைவராக வருவதற்கு ஷாவுக்கு எல்லாம் தகுதியே கிடையாது... மோடியின் தலைமைக்குப் பிறகு பாஜகவிலும் குடுமிப்பிடி சண்டை ஆரம்பிக்கும்... ஆகையால் தான் நான் பலமுறை கூறி வருகிறேன்... தமிழகத்தில் பாஜக என்றைக்குமே காலூன்ற முடியாது என்று...


ஆரூர் ரங்
ஆக 15, 2025 10:49

காந்திக்குப் பிறகு யார். நேருவுக்கு பிறகு யார்? போன்ற கேள்விகள் அக்காலத்திலேயே எழுந்தன. ஆனால் அவர்கள் காலத்தை விட இப்போ நாடு வளர்ந்துள்ளது. எத்தனையோ மகான்கள் உருவான புண்ணிய பூமியான பாரதம் என்றும் நிலைத்து உலகிற்கு வழிகாட்டியாக விளங்கும்.


pmsamy
ஆக 15, 2025 06:40

ஜெயலலிதா அம்மா போன பிறகு எடப்பாடி ஜெயிச்சதே இல்லை


m.arunachalam
ஆக 15, 2025 08:19

அ தி மு க சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு? . முதல்வர் ஆக வில்லை என்றால் ஜெயிக்கவில்லை என்று அர்த்தமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை