உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளான் அப்ரூவல் வழங்க 20,000 ரூபாய் லஞ்சம்; பரமக்குடி நகரமைப்பு அதிகாரி கைது!

பிளான் அப்ரூவல் வழங்க 20,000 ரூபாய் லஞ்சம்; பரமக்குடி நகரமைப்பு அதிகாரி கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரமக்குடி: வீடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் வழங்குவதற்காக, 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பரமக்குடி நகராட்சி நகரமைப்பு அலுவலர் பர்குணன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமான நான்கு மாடி வீடு கட்ட அப்ரூவல் கட்டணமாக, 76 ஆயிரத்து 850 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து பிளான் அப்ரூவல் கேட்டபோது, டி.பி.ஓ., பர்குணன், தனக்கு ஒரு வீட்டு மனைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும், என கேட்டுள்ளார். தொடர்ந்து பணத்தை வழங்காத நிலையில் பைல்கள் அப்படியே கிடக்கும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியர், லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், 20 ஆயிரம் ரூபாயை பர்குணனுக்கு, ஜிபே., மூலம் அனுப்பும்படி தெரிவித்தனர். அதன்படி, அவரும் அனுப்பியுள்ளார்.அதனை ஆதாரமாக வைத்து 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பர்குணனை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Shiva Karate
ஜன 24, 2025 08:58

ஜீபே வில் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அப்படி அனுப்பி பழிவாங்கப்பட்டது


Venkateswaran Rajaram
ஜன 23, 2025 18:27

பதவி உயர்வு நிச்சயம் ...வாழ்க திராவிட மாடல்


Barakat Ali
ஜன 23, 2025 18:04

இவன் அதிகாரியா ???? திருடுறவன் மாதிரி இருக்கானே ????


V RAMASWAMY
ஜன 23, 2025 19:20

முதலில் தேவைப்படும் படிப்பு கோட்டாவில் பாஸ் செய்தபின், தகுதி பெற லஞ்சம் கொடுத்த பின், அரசு அலுவலங்களில் வேலைக்கு லஞ்சம் இம்மாதிரி லஞ்சம் கொடுத்து வேலை செய்யும் அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் கொடுத்த லஞ்சபணம் வசூல் எப்படி செய்வது, பின் அவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது ? இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுப்பது அரசியல்வாதிகள் தானே? அரசாள உரிமை கொடுக்கும் மக்கள் குறை சொல்லக்கூடாது, ஆமாம் தெரிஞ்சுக்கோங்க.


sundarsvpr
ஜன 23, 2025 13:40

குறைந்த தொகை லஞ்சம் பெற்ற அதிகாரி கைது சரியான நடவடிக்கை. கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற செந்தில் பாலாஜி வழக்கில் மாட்டிக்கொண்டாலும் அமைச்சராக தொடருகிறார்.இதனை நீதி அனுமதிக்குமானால் ஏன் பரமக்குடி நகரமைப்பு அதிகாரிக்கு வேலையை தொடர அனுமதிக்க கூடாது?


Ramesh Sargam
ஜன 23, 2025 12:48

மீண்டும் ஒரு சிரியமீன்தான் வலையில் சிக்கியிருக்கிறது. பல லட்சங்களை லஞ்சமாக வாங்கும் பெரிய பெரிய மீன்கள் சிக்குவதேயில்லை. இவர்கள் வீசும் வலை அவ்வளவு சிறியது. என்னத்த செய்ய?


haridoss jennathan
ஜன 23, 2025 12:45

கட்டிடம் கட்ட கணினியில் வரைபடம் ஏற்ற என்று அரசு சொன்னதோ, அதிலிருந்து லக்ஷம், ஐம்பதாயிரம் இருபதாயிரம் லஞ்சம் தாண்டவமாக்குகிறது என்பது பாமர மக்களும் அறிந்த ஒன்று. அதிகாரிகளின் காட்டில் மழை. சிலருக்கு தான் எது போன்ற இழிவு. அப்போதும் நம் அதிகார வர்க்கங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தியதாக தெரியவில்லை.மனிதர்களாக பார்த்து திருந்தவேண்டும்


angbu ganesh
ஜன 23, 2025 12:42

மாட்டறவங்க எல்லாம் உள்ளுக்குள்ள பங்கு பிரிக்கறதில வர சண்டையாலதான் அவங்களுக்குள்ள சரியான பங்கு போன எவனும் மாட்ட மாட்டானுங்க நாங்க பணமில்லாம் எங்க தொழிலை GOVT ஆஃபீசில பண்ண முடியாது


A R Balakrishnan
ஜன 23, 2025 12:41

ஜிபேயில் அவர் கேட்காமலே பணத்தை யார் வேண்டுமானாலும் அனுப்பலாமே. நீதிமன்றத்தில் கேஸ் நிற்காது


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 23, 2025 12:05

அட போங்கப்பா இத்தனை வருஷமா வாங்கினது எவருக்கும் தெரியாமலா இருக்கும் ? அந்த போசிட்ங் நெறய கிராக்கி இருக்கும் . அதனாலே போட்டுட்டு வாங்கிண்டங்க


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 23, 2025 12:04

அட போங்கப்பா இத்தனை வருஷமா வாங்கினது எவருக்கும் தெரியாமலா இருக்கும் ? அந்த போசிட்ங் நெறய கிராக்கி இருக்கும் . அதனாலே போட்டுட்டு வாங்கிண்டங்க ஹி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை