மேலும் செய்திகள்
பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
09-Jul-2025
சென்னை:சென்னையில் நேற்று மூன்றாவது நாளாக, சாலை மறியலில் ஈடுபட்ட, பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர், கடந்த ஒரு வாரமாக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம் அருகே, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இன்றும் போராட்டத்தை தொடர உள்ளதாக, பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
09-Jul-2025