பயணிகள் வருவாய் ரூ.3337 கோடி முதலிடத்தில் புது டில்லி ரயில் நிலையம் சென்னை மூன்றாமிடம்
சிவகங்கை:இந்திய ரயில்வே துறையில் பயணிகள் கட்டணம் மூலம் 2023--2024ம் ஆண்டு ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டி, புதுடில்லி ரயில்வே ஸ்டேஷன் முதலிடம் பிடித்துள்ளது.இந்திய ரயில்வே நாடு முழுவதும் ரயில்களை இயக்கி வருகிறது. கடந்த நிதியாண்டில் பயணிகள் கட்டணம் மூலம் ரூ.3337 கோடியே 66 லட்சத்து 47 ஆயிரத்து 613 வருவாய் ஈட்டி புதுடில்லி ரயில்வே ஸ்டேஷன் முதலிடம் பிடித்துள்ளது.இரண்டாம் இடத்தில் ரூ.1692 கோடியே 39 லட்சத்து 75 ஆயிரத்து 838 வருவாய் மூலம் ஹவுரா ரயில் நிலையமும், மூன்றாவது இடத்தில் ரூ.1299 கோடியே 31 லட்சத்து 43 ஆயிரத்து 870 வருவாய் ஈட்டி சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனும் உள்ளன.திருப்பதி 27 வது இடம், கோவை 34 வது இடம், தாம்பரம் 54 வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை 61 வது இடத்திலும், திருச்சி 78 வது இடத்திலும் உள்ளன. 98 வது இடத்தில் சேலம், 100 வது இடத்தில் கண்ணுார் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.