உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிந்து சென்ற இன்ஜினால் பயணியர் பீதி

பிரிந்து சென்ற இன்ஜினால் பயணியர் பீதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: வேலுார் அருகே, ரயில் இன்ஜினுடன் இருந்த பெட்டிகள் துண்டிக்கப்பட்டு, 100 மீட்டர் ஓடியதால், பயணியர் பீதியடைந்தனர்.அசாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து, ரேணிகுண்டா, காட்பாடி வழியாக கன்னியாகுமரி செல்லும், விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த, 22ம் தேதி இரவு, 7:55 மணிக்கு அசாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து புறப்பட்டு, நேற்று காலை வேலுார் மாவட்டம், திருவலம் அருகே காலை, 8:55 மணிக்கு சென்றது. பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, இன்ஜினையும், ரயில் பெட்டிகளையும் இணைக்கும், 'கப்ளிங்' திடீரென உடைந்து இன்ஜினுடனான தொடர்பு துண்டித்து, 100 மீட்டர் துாரம் இன்ஜின் மட்டும் தனியாக வேகமாக ஓடியது.

இதனால், ரயிலில் இருந்த பயணியர் கூச்சலிட்டனர். இன்ஜின் டிரைவர் ஏதோ விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்து, பின்னால் வரும் பெட்டிகளை பார்த்தபோது, அவை இன்ஜினிலிருந்து துண்டித்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், ரயில் பெட்டிகள் இன்ஜினுடன் மோதாமல் இருக்க, லாவகமாக இன்ஜினை அரை கி.மீ.,க்கு இயக்கி, பின், பெட்டிகளை நிறுத்த செய்தார்.பின், இன்ஜினை மட்டும் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இயக்கி, அங்கிருந்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.இந்த ரயிலின் பின்னால் வந்து கொண்டிருந்த, சென்னை - பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின், 10:40 மணிக்கு கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. இதனால், 2 மணி நேரம் அவ்வழியாக வந்த இரு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அதிலிருந்த பயணியர் அவதியடைந்தனர்.வழக்கமாக, 100 கி.மீ முதல், 120 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், பொன்னை ஆற்று மேம்பாலத்தை கடக்கும்போது, 30 முதல், 35 கி.மீ., வரை மெதுவாக இயக்கப்பட்டது. குறைந்த வேகத்தில் சென்ற போது, பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் உடைந்ததால், பெரிய அளவில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rasheel
அக் 26, 2024 18:32

அமைதி வழியில் ஏவனோ சதி செய்கிறான். அரசாங்க வேலை, எவன் உயிர் போனால் என்ன, சம்பளம் வந்து கொண்டே இருக்கும்.


M Ramachandran
அக் 26, 2024 12:36

இது ஏன் பெட்டிகளுக்குள் ஊடல்


Apposthalan samlin
அக் 26, 2024 11:28

வந்தே பரத் கு கொடுக்கிற முக்கியத்தை சாதா ரயிலுக்கு கொடுக்கிறதில்லை ரயில்வேயை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது பிஜேபி அரசாங்கத்தை சாரும் .


கிஜன்
அக் 26, 2024 09:30

இனிமே எல்லாமே இப்படித்தான் .... பழகிக்குங்க ...


Dharmavaan
அக் 26, 2024 09:10

எல்லாமே சதி வேலையாக தெரிகிறது மோடி அரசு துப்பு துலக்கி இந்த பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும் எல்லாம் வங்கதேச ரொஹிங்கா கள்ளக்குடியேறிகளின் சதி அவைகளை திருப்பி விரட்ட வேண்டும்


Palanisamy Sekar
அக் 26, 2024 07:49

கழற்றிவிட்டது எஞ்சினா அல்லது கழன்றுபோனது பெட்டியா? திமுகவா அல்லது திருமாவா என்பது போன்றே..


தமிழன்
அக் 26, 2024 06:59

மோடியின் பொற்கால ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பூ அடுத்த 6 நாட்கள் கழித்து ஏதாவது ஒரு விபத்து நடக்கும் என்று நினைக்கிறேன் இது 6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து என்று சர்வே சொன்னதை வைத்து சொல்கிறேன் அப்படித்தானே நடந்து வருகிறது


RAJ
அக் 26, 2024 06:38

இனிமே ரயில்ல பயணம் செய்றதுக்கு முன்னாடி சொந்தக்காரங்களுக்கு எல்லாம் ஒரு சிக்னல் குடுத்துட்டுதான் கிளம்பனும் போல இருக்கு. ஜப்பான் சீனாலயெல்லாம் இப்படிய நடக்குது... ??? இங்கமட்டும் என் உயிர் பயம் காமிக்கறாங்க பரம.. .. செரி உட்ற .. இருந்த ஊருக்கு.. இல்லட்டா சாமிக்கு..


Kasimani Baskaran
அக் 26, 2024 06:33

தொய்வில்லாமல் பராமரிப்பில் கவனம் செலுத்தவேண்டும். பழைய குப்பைகளை தூக்கி வீசிவிட்டு புதிய பெட்டிகளை வாங்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை