உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூலிப்படையை கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்படுத்துங்க; அரசுக்கு சொல்கிறார் திருமா!

கூலிப்படையை கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்படுத்துங்க; அரசுக்கு சொல்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கூலிப்படையை அரசு கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்படுத்த வேண்டும்' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பதில்: மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவமாக இது இருக்கிறது. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று, பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் கூடி இருக்கும் இடத்தில், படுகொலை செய்யும் அளவிற்கான துணிச்சல், கூலிப்படையினரின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த பிரச்னைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.அரசு தேர்வுகள் பொங்கல் நேரத்தில் நடத்துக்கிறார்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க, பா.ஜ., மற்றும் மத்திய அரசு தயாராக இல்லை. ஏற்கனவே சுட்டிக்காடிய பிறகும், இந்தாண்டும் அவர்கள் அதேயே செய்கிறார்கள். தமிழக மக்களை எந்த அளவுக்கு அவர்கள் அலட்சியம் படுத்துகிறார்கள். தமிழக மக்களின் கலாசாரத்தை அவமதிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இந்த போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Bhaskaran
டிச 23, 2024 14:17

அதாவது உங்க ஆளுங்களை


Minimole P C
டிச 22, 2024 07:35

First he has to dismantle his unit which does adangamaru, athumeeru, thirupiadi. Please teach them what is constitution and law. Ambedkar who is the father of our consitution would have never thought that his name will be used for the above.


Venkatesh
டிச 21, 2024 22:13

தோழமை நொட்டுதல், சாமரம் வீசுதல், என்று பல சமூக சேவை


சுலைமான்
டிச 21, 2024 21:58

ஓ...... விசிக வை கட்டுப்படுத்த சொல்றாரா? சூப்பர் சூப்பர்.


sankaranarayanan
டிச 21, 2024 20:59

தன் விணை தன்னை சுடும் என்ற பழமொழிக்கு ஆளானவர் இவர் ஆதவ் அருஜுனை கழட்டிவிட்டு பெரிய கட்சிக்கு ஜால்றாப்போடுபவருக்கு தேர்தல் நெருங்க நெருங்க எதிர்மறையாகத்தான் பேசுவார் இவருக்கே என்ன பேசுகிறோம் என்ன பேச வேண்டும் என்பதே புரியாது புரியவும் வைக்கமுடியாது


Vijay
டிச 21, 2024 20:16

சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், மதத்தை தாண்டி யோசிக்காத சிறுபான்மையினர், பணத்திற்கு ஓட்டு போடும் கும்பல் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இதை மாற்றவே முடியாது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 22, 2024 08:10

தமிழகத்தின் இன்றைய நிலைமையை பட்டவர்த்தனமாக சொல்லி விட்டீர்கள் விஜய்.. இவர்கள் அனைவரும் தங்கள் நிலையை மாற்றி கொள்ளாத வரையில் தமிழகம் மாற்றம் பெற வாய்ப்பில்லை....!!!


ராமகிருஷ்ணன்
டிச 22, 2024 08:34

அப்போ தமிழக மக்களுக்கு புத்தியே வராதா. வேற நாட்டுக்கு போயி னும்


M Ramachandran
டிச 21, 2024 20:07

கூலிப்படையை அமைத்து தீவிர படுத்துங்கள் என்பதாகாவா


shanmugam sankaralingam
டிச 21, 2024 19:52

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார். மக்களுக்கு உயிரே போகுது. ஆனால் தோழமை சுட்டுவிட்டு இவர் டி எம் கே வுடன் கொஞ்சி குலாவ போய்விடுவார். பாவம் மக்கள் , ₹500/- க்கு வாக்கு போட்டுவிட்டு தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டார்கள்.


A1Suresh
டிச 21, 2024 19:11

அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி - கூலிப்படையினரின் தலைமையகமே இவர் தானே


S.SRINIVASAN
டிச 21, 2024 18:38

இந்த கையாலாகாத அரசு தமிழக மக்கள் மீது அக்கறை வைத்து நீ சொன்னது போல் கூலிப்படையின்மீது கவனம் செலுத்தினால் உன்னுடைய கோரமுகம் வெளி வந்து விடும் தெருமா.ஏனெனில் உன் பிறப்பு மற்றும் உன்னுடைய சுபாவம் மற்றும் அப்பாவிகளுக்கு நீ அடிக்கடி சொல்லிக் கொடுக்கும்/ ஆதரிக்கும் தீவிரவாதம் மற்றும் போலி கௌரவம் அந்த அப்பாவிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை குற்றவாளிகள் ஆக்குகிறாய். இதனை கூடிய விரைவில் நீ அறுவடை செய்வாய். உன்னுடைய தவறான வளர்ப்பு உன் மார்பில் பாயப்போகும் நாள் கூடிய விரைவில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை