உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.சி.ஆர்., சட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை

பி.சி.ஆர்., சட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை

மீஞ்சூர் : 'பி.சி.ஆர்., சட்டத்தை தவறாக பயன்படுத்தினால், பட்டியல் சமுதாய மக்களை திரட்டி பா.ஜ., போராடும்' என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது. பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என, திருமாவளவன், காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w3l1wwfn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்படி என்றால் கொலையாளிகளை அவர்களுக்கு தெரியும் என அர்த்தம். காவல் துறை அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை செய்ய வேண்டும்.காங்., தலைவர் செல்வபெருந்தகை குற்றப்பின்னணி உள்ளவர் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதைதான் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிடுகிறார். இதற்காக அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் எனப்படும், பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவேன் என செல்வபெருந்தகை மிரட்டுகிறார். ஒருவர் மீது பி.சி.ஆர்., சட்டத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் ஜாதியை குறிப் பிட்டு இழிவுப்படுத்தியிருக்க வேண்டும். செல்வப்பெருந்தகையின் குற்றப்பின்னணி குறித்தே அண்ணாமலை,பேசி உள்ளார்.அண்ணாமலை மீது பி.சி.ஆர்., சட்டத்தை பயன்படுத்துவேன் என்பது, அந்தசட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகும். பி.சி.ஆர்., சட்டத்தை தவறாக பயன்படுத்தினால், பட்டியல் சமுதாய மக்களை திரட்டி பா.ஜ., போராடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Kuppan
ஜூலை 11, 2024 16:55

ஜாதி ஒழிக்காமல் ஜாதியை வளர்த்து விட்டதே... தரமாக கிடைக்க PCR சட்டத்தை மத்திய அரசு பரிசீலனை செய்து நீக்க வேண்டும்


MADHAVAN
ஜூலை 11, 2024 16:53

பேசுவது எல்லாம் நரி ஊளை விடுவது போன்றது, அதை யாரும் சீண்டமாட்டார்கள்,


Ganapathy Subramanian
ஜூலை 11, 2024 12:26

அன்று ஆட்சியில் இருந்தவர் மீது வன்கொடுமை சட்டத்தில் கேஸ் போடவேண்டியதுதானே?


venugopal s
ஜூலை 11, 2024 11:55

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தமிழக மக்கள் பாஜகவில் இருக்கின்றனரா?


Duruvesan
ஜூலை 11, 2024 12:40

தெரியலையா ...


Mettai* Tamil
ஜூலை 11, 2024 13:36

ஏன் கண்ணு , காதுல ஏதும் கோளாறா ..........


Sampath
ஜூலை 11, 2024 16:28

இப்போதுதான் தூங்கி எழுந்தீர்களா


Ms Mahadevan Mahadevan
ஜூலை 11, 2024 11:25

ஜாதி ஒழிக்காமல் ஜாதியை வளர்த்து விட்டதே அரசியல் சுக வாசிகள்தான். ஜாதி வேற்றுமை இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் முயல்வோம்


Ravi
ஜூலை 11, 2024 11:19

இந்த மானங்கெட்ட திமுக அரசு செல்வப்பெருந்தகையை நம்பி பிசிஆர் கேஸ் போட்டால் வெற்றி பிஜேபிக்கே.. ஆம் அனைத்து மாவட்டத்திலும் பொய்யான பிசிஆர் கேசில் காட்டியவர்கள் கிராமத்திற்கு இரண்டு பேராவது இருக்கிறார்கள்.. அவர்கள் பிஜேபி நோக்கி திரும்புவார்கள்


ram
ஜூலை 11, 2024 11:12

prc சட்டத்தை சில நபர்கள் MISUSE செய்து பெரிய கம்பெனி உயரதிகாரிகளை கைது செய்ய வைத்து இருக்கிறார்கள். அதுவும் ரெயில்வே டிபார்ட்மெண்டில் இதில் அடிக்கடி நடக்கும். மத்திய அரசு இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


ramasamy thanikkodi
ஜூலை 11, 2024 10:30

சாதிகளுக்குள் சம நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவே கொண்டு வந்த சட்டம் பிசிஆர் சட்டம் சமூகங்கள சமநிலையோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக மிஷனரிகளும் பிரிவினைவாதிகளும் திட்டமிட்டு பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்


veeramani
ஜூலை 11, 2024 09:52

பி.சி.ஆர்., சட்டத்தை முதலில் வாபஸ் பெறுங்கள் ஒருவரை ஜாதி பெயர் சொல்லுவது சட்டப்படி தப்பு என்றால், பள்ளிகளில் அரசு அலுவலகங்களில் ஜாதி இட ஒதிக்கீடு எப்படி செல்லுபடியாகும் பி.சி.ஆர்., சட்டத்தை வைத்து ஒருவரை மிரட்டுகிறார்கள் என்றல் மற்றைய மக்கள் ஜனநாயக நாட்டில் எப்படி சமத்துவமாக வாழமுடியும்


Alagusundram KULASEKARAN
ஜூலை 11, 2024 09:42

சும்மா விட கூடாது இந்த ஒட்டுண்ணி செல்வபெறும்தகையை தல சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் போராட தயங்க கூடாது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்கவேண்டும் ஜாதி பெயரை குறிப்பிட்டாத போது அதனை வைத்து மிரட்டினால் ஆணவம் அதிகார தீமிர் ஆளும் கட்சியின் ஒட்டுண்ணி யாரிடம் வேலை காட்டுகிறது ஐபிஎஸ் தல அண்ணா மலை வாலை ஒட்ட நறுக்கி விடுவார்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை