மேலும் செய்திகள்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
03-Jun-2025
சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணத்தை, 4,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.'அரசு ஓய்வூதியதாரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை கொண்டாட, வழங்கப்படும் முன்பணம், 4,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 'இந்த உயர்வால், 52,000 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். அரசுக்கு 10 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். 'பொங்கல் பண்டிகை கொண்டாட, முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட, சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் 500 ரூபாய், 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் ஏப்ரல், 28ம் தேதி அறிவித்தார். இவற்றை செயல்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகைகால முன்பணத்தை, 10 மாத தவணையில் பிடித்தம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.
03-Jun-2025