| ADDED : டிச 28, 2025 02:17 AM
கிராமப்புறத்தில் இருந்து வேலை தேடி, நகரங்களை நோக்கி மக்கள் செல்வதை தடுக்கக்கூடிய மகத்தான திட்டம் தான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். அந்த மகத்தான திட்டத்தை, பிரதமர் மோடி அரசு, லோக்சபாவில் தனக்கு இருக்கும் மிருகத்தனமான பலத்தை பயன்படுத்தி, நிர்மூலமாக்கியுள்ளது. அந்த திட்டத்தை சீர்குலைத்தவர்கள் தீய சக்தி இல்லை. நாடு முழுதும் 30 கோடி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தவர்கள் தீய சக்தி இல்லை. கல்விக்காக கொடுக்க வேண்டிய 2,500 கோடி ரூபாய் நிதியை கொடுக்காதவர்கள் தீய சக்தி இல்லை. ஆனால், இவற்றையெல்லாம் எதிர்த்து போராடுகிற ஒரு கட்சியை தீய சக்தி என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறுகிறார். எது தீய சக்தி, எது நல்ல சக்தி என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், இம்முறை நிறைய தொகுதிகளில் இ.கம்யூ., போட்டியிடும். - முத்தரசன் மூத்த தலைவர், இ.கம்யூ.,