உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களுக்கு பொறுப்புணர்வு வேணும்: வெளிநாட்டு பயண அனுபவம் பற்றி மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

மக்களுக்கு பொறுப்புணர்வு வேணும்: வெளிநாட்டு பயண அனுபவம் பற்றி மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஐரோப்பிய பயணமும், ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்ற தலைப்பில், மக்களுடன் ஸ்டாலின் செயலியில் வந்துள்ள கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பதில் அளித்தார்.அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண அனுபவங்கள் பற்றியும் தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழகம் பற்றிய பார்வை எப்படி என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v1io9gjb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்திந்தபோது, தமிழகத்தில் கட்டமைப்பு, படித்த இளைஞர்கள், திறமை மேம்பாடு குறித்து கூறினோம். அந்நாட்டு அமைச்சர்களுடன் பேசியபோது தமிழகம் குறித்து பெருமையாக பேசினர்.இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு, அனைத்து துறைகளும் சமமாக பகிர்ந்தளிப்பது குறித்து வியந்து பாராட்டினர்.முதலீட்டாளர்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பமாக உள்ளனர்.1000 ஆண்டுக்குமேல் பழமையானது ஆக்ஸ்போர் பல்கலைகழகம். இங்கு படித்து வரும் நம் மாணவர்கள், லண்டன் மற்றும் ஜெர்மனி மாணவர்களுடன் இணைந்து படித்து வருகின்றனர். நமது மாணவர்கள், அரசு பள்ளி, இட ஒதுக்கீட்டில் படித்து பயன் அடைந்து, உயர்கல்வியை முழு ஸ்காலர்ஷிப் உடன் இங்கு படித்து வருவதாக பெருமையுடன் கூறினர்.இது எனக்கு மறக்க முடியாத பயணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள், பொது இடங்களில் பொறுப்புணவர்வை கடைப்பிடிப்பது போல் இங்கும் கடைபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Thiagaraja boopathi.s
செப் 21, 2025 15:33

புதிய சூட்டிங் ஸ்பாட்


SIVA
செப் 21, 2025 10:58

தனுஷ் படத்தில் ஒரு வசனம் வரவும் நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற பார்த்தியா என்று .....


Mahadevan
செப் 21, 2025 10:33

அறிவுரை சொல்லத் தகுதி இல்லாத ஒருவர் நமக்கு அறிவுரை கூறுகிறார். முதலில் அவர் தனது சொந்த குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் அறிவுரை சொல்லத் தகுதி பெறட்டும்.


Sun
செப் 20, 2025 23:59

பிரியாணியை ஓசியிலோ, கடைக்காரரை அடித்தோ சாப்பிட மாட்டேன் காசு கொடுத்து மட்டும்தான் சாப்பிடுவேன் என்பதில் இருந்து ஆரம்பிக்கட்டும் பொறுப்புணர்வு.


Modisha
செப் 20, 2025 23:28

அங்கெல்லாம் ஊழல் ரொம்ப குறைவு. இதை எப்போ கத்துக்கப்போறீங்க .


theruvasagan
செப் 20, 2025 22:26

கண்ட இடத்தி்ல் சிலை வைப்பதும் கட்சிக்கொடி பிளக்ஸ் பேனர் அலங்கார வளைவு கிலோமீட்டர் கணக்கில் சாலைகளில் வைத்து பொதுமக்களுக்கும் போக்குவரததுக்கும் இடைஞ்சல் பண்ணுவதும் மாநாடு பொதுக்கூட்டம் போட்டு மைதானங்களை குப்பைக்காடாக ஆக்குவதற்கும் யாரெல்லாம் காரணமோ அவர்களிடம் இந்த அறிவுரையை சொல்லுங்கள்.


சிட்டுக்குருவி
செப் 20, 2025 21:52

அடிக்கடி வெளிநாடு சென்று வரும் முதல்வர் அங்கெல்லாம் கட்டிங் ,கமிஷன் ,கரப்ஷன் உள்ளதா ,நகரங்களெல்லாம் நம்ம சிங்கப்பூர் மாதிரி இருக்கின்றதா ,காவல்துறை எல்லாம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் அடிபொடிகளாக செயல்படுகிறார்களா ,மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கின்றது ,சாராயம் எல்லாம் நம்மதமிழ்நாட்டைப்போல அரசுகள் வியாபாரம்செய்து அவர்கள் குடும்பத்தையும் குறுநில மன்னர்களாக்குகின்றார்களா ?, தங்கள் குடும்ப தொழில்களுக்காகவே அருமையான திட்டங்கள் தீட்டுகின்றார்களா ? அவரவர் குடும்ப நீத்தாருக்கு ஒழுஙகாக நினைவு சின்னங்கள் அமைகின்றார்களா ?என்பதையும் அறிந்த அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்தால் உலகுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதாய் மக்கள் பூரிப்படைந்து பெருமைகொள்வார்கள் .


Chandru
செப் 20, 2025 21:49

உளறல் போதும் ஸ்டாலின் அப்பா . இனிமேல் உங்களக்கு லைப் time ஒய்வு அவசியம்


cyber cyber
செப் 20, 2025 21:47

தலைவரே முதல்ல உங்க கட்சி கிட்ட போய் சொல்லுங்க அப்புறம் பேசலாம்


m.arunachalam
செப் 20, 2025 21:27

தெரு நாய் பிரச்சனை , போதை பொருட்கள், ரவுடிகளின் பிரச்சனை. ஆகியவற்றை தீர்க்கும் பொறுப்பு உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை