உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்த காத்திருக்கும் மக்கள்: இபிஎஸ்.,

அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்த காத்திருக்கும் மக்கள்: இபிஎஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் காத்திருப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்., தெரிவித்தார். தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற, கடந்த 1972ம் ஆண்டு, அக்., 17ம் தேதி, அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். கடந்த 1977 சட்டசபை தேர்தலில், அ,தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. எம்.ஜி.ஆர்., முதல்வரானார். தி.மு.க., முகவரி இழந்து அடையாளம் தெரியாமல் போனது. ஜெயலலிதா, தமிழகத்தை, பீடுநடைபோடச் செய்தார். அவர் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.,வுக்கு எத்தனையோ சோதனைகள், வேதனைகள், சதிகள், சூழ்ச்சிகள், துரோகங்கள் வந்தன. அவற்றை கடந்து, கட்சியை மீட்டு, இன்று வீறுநடை போட செய்திருக்கிறோம். கடந்த, நான்கரை ஆண்டுகளாக, தி.மு.க., அரசின் 'பெயிலியர்' ஆட்சியில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, சொத்து வரி, மின் கட்டணம், பால், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களை, புதை குழியில், தள்ளிவிட்டு, தங்கள் குடும்பம் செழிக்க, பிரயத்தனம் செய்கிறது. தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை விரட்டவும், அ.தி.மு.க.,வை ஆட்சி பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும், அ.தி.மு.க.,வின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்தவிட முடியாது. அ.தி.மு.க., 54வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், இந்த தருணத்தில், தொண்டர்களுக்கு வாழ்த்துகள். தமிழக மக்களை, இன்னல்களுக்கு ஆளாக்கிய, தி.மு.க.,வின் 'பெயிலியர்' ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம். அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

anbuanna
அக் 18, 2025 04:47

nothing like that edups


Santhakumar Srinivasalu
அக் 17, 2025 18:43

நல்லா கனவு காணுங்கள் இபிஎஸ்


ராஜா
அக் 17, 2025 15:16

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார் சாமியோ


Narayanan Muthu
அக் 17, 2025 13:00

தமிழகத்தில் ஜோக்கர் பதவிக்கு எடப்பாடிக்கும் நாலுகோடி நாயினாருக்கும் தான் போட்டியே. அண்ணாமலைக்கு அடுத்த இடம்தான்.


Venugopal S
அக் 17, 2025 12:54

முதல் முறையாக திமுகவை தொடர்ச்சியாக இரண்டாம் தடவை ஆட்சியில் அமர்த்தப் போகும் சாதனையை இபிஎஸ் பாஜக கூட்டணியுடன் செய்வார் என்று தோன்றுகிறது!


Kadaparai Mani
அக் 17, 2025 13:35

திமுக எதிர்கட்சியாகக்கூட வராது இந்ததடவை .அதிமுக எடப்பாடி முதல்வர் .எதிர்க்கட்சி தலைவர் விஜய் அல்லது நைனார் நாகேந்திரன் அவர்கள் .2011 ஆம் ஆண்டு முடிவு திரும்ப போகிறது


திகழ்ஓவியன்
அக் 17, 2025 12:51

பகல் கனவு கான்கிறார் பழனி பாவம், கொரானா ..... பணம் எல்லாம் காலி ஆகி கொண்டு இருக்கு அனால் பிடி ஒன்றும் படவில்லை , விஜய் கூட்டு வைத்தால் அவர் முதல்வர் இவர் துணை முதல்வர் அப்போ பிஜேபி கதி பாவம் புலம்பி கொண்டு இருக்கிறார், மகனை காக்க சம்பந்தியை மீட்க சகலமும் துறக்க தயார்


பாலாஜி
அக் 17, 2025 12:36

ஏலியன்களின் நாட்டிலா பழனிசாமி?


Anbuselvan
அக் 17, 2025 12:33

அது என்னவோ உண்மைதான் ஆனால் இது நிஜமாக வேண்டுமெனில் மக்கள் பழைய ஒற்றுமையான அதிமுகவை பார்க்க விரும்புகிறார்கள் என தோன்றுகிறதே


Senthoora
அக் 17, 2025 10:08

சான்ஸ்சே இல்லை தலைவா, இவரும் ஆச்சி அதிகாரத்தை பிடிக்க ட்ரை பண்ணுறார், இது ஒன்னும் வேளைக்கு ஆகாது. உங்களைவைத்து விஜய், அல்லது அண்ணாமலை CM ஆகா வரலாம், அப்போ நீங்க கூன்பாண்டியாக விழுந்து, விழுந்து கும்பிடலாம், இது நடகும், ஏன்னா ஜெயலலிதா அம்மாவுக்கு செய்த துரோகம், சும்மா விடாது.


Kadaparai Mani
அக் 17, 2025 13:44

திமுக ஆள் அம்மா பாசம். புரட்சி தலைவி அம்மா பற்றி திமுக உடன்பிறப்புகள் பேச கூடாது


Ahamed
அக் 17, 2025 09:42

இதுவரை பார்த்த அதிமுக வேறு இனி பார்க்கப்போற அதிமுக வேறு லெவல்ல இருக்கும் அடுத்த வருசம் 2026 ரில் பார்ப்போம்... பொறுத்துருந்து பார்ப்போம்...


முக்கிய வீடியோ