உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருப்பரங்குன்றம்: பாதைகளை அடைத்ததால் பரிதவித்த மக்கள்

 திருப்பரங்குன்றம்: பாதைகளை அடைத்ததால் பரிதவித்த மக்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் மலை மேல் செல்ல தடை விதிக்கப்பட்டது. மலைக்கு செல்லும் பாதையின் முன் பகுதியில், மெயின் ரோட்டின் அருகே போலீசார் வழக்கம் போல் இரும்பு தடுப்புகள் அமைத்தும், பாதையின் பாதிவரை போலீஸ் வாகனத்தை நிறுத்தியும் மலைக்கு செல்பவர்களை தடுத்தனர். மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோவில் தெரு, கோட்டை தெரு பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்ததால், அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. குடிநீர் வாகனம், குப்பை வாகனங்கள் வரவில்லை. அதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் தங்களுக்கு பாதை விடுமாறு கேட்டனர். அதற்கு போலீசார் மாற்றுப்பாதையில் செல்லுமாறு தெரிவித்தனர். பொதுமக்களோ, 'வேறு பாதை கிடையாது. இந்த ஒரு பாதை தான் உள்ளது. அதனால் பாதை வேண்டும்' என, போலீசாரிடம் கேட்டனர். போலீசார் மறுக்கவே அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், அப்பகுதியிலுள்ள வாகனங்களை, பெரிய ரத வீதியில் நிறுத்திக் கொள்ளுமாறும், இரவு, 7:00 மணிக்கு மேல் எடுத்து வரலாம் எனவும் கூறி அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் நடந்து சென்று வர போலீசார் அனுமதித்தனர். பொதுமக்கள் கூறுகையில், 'தெருக்களில் இருந்து வெளியில் செல்ல முடியாதபடி அனைத்து பகுதிகளிலும் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து அடைத்து விட்டனர். பள்ளிக் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் எப்படி செல்ல முடியும். 'வெளி நபர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது சரிதான். ஆனால் இந்த தெருக்களில் குடியிருக்கும் எங்களுக்கும் கட்டுப்பாடு விதித்தால் நாங்கள் எப்படி எங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும். எங்கள் வீடுகளை விட்டு தெருவிலா போய் குடியிருக்க முடியும்' என்றனர். மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோவில் அருகே உள்ள தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதாக, திருப்பரங்குன்றம் ரகுநாத் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ