உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாத்திரையை மக்கள் ஏற்கமாட்டார்கள்: அன்புமணிக்கு சொல்கிறார் ராமதாஸ்!

யாத்திரையை மக்கள் ஏற்கமாட்டார்கள்: அன்புமணிக்கு சொல்கிறார் ராமதாஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என 100 நாள் நடைபயணம் மேற்கொண்டு வரும் அன்புமணியை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், ராமதாஸ் கூறியதாவது: பாமகவின் வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் இருக்கிறது. ஒரே தலைமை தான், ஒரே தலைவர் தான். தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் துளியும் பயனில்லை.

புகார் மனு

தொண்டரும் ஏற்க மாட்டான். மக்களும் ஏற்கமாட்டார்கள். பார்க்க மாட்டார்கள்.போலீசார் தலைமைக்கும், உள்துறை தலைமைக்கும் எல்லாமும் தெரியும். முறைப்படி புகார் மனு கொடுத்து இருக்கிறோம். பாமக தலைவர் என்ற பெயரோடு, அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும், அதை கேட்காதீர்கள், பதிவு செய்யாதீர்கள். பாமகவின் நிறுவனர், தலைவராக தைலாபுரத்தில் இருந்து நான் இதை சொல்கிறேன். ஒட்டு கேட்கும் கருவியை போலீசாரிடம் ஒப்படைத்தோம். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. நம்முடைய சைபர் கிரைம், இந்திய அளவில் திறமையானது. அவர்கள் நினைத்தால், இரண்டே நாட்களில் கண்டுபிடித்து இருக்கலாம்.

தகவல்கள்

எனக்கு இதுவரை அது பற்றிய தகவல்கள் ஏதும் சைபர் கிரைம் துறை மூலமாகவோ, போலீசார் மூலமாகவோ கிடைக்கவில்லை. அதனால் விரைந்து யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்று கண்டுபிடித்து சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 31, 2025 15:59

நீங்கள் சொகுசு நாற்காலியில் அமர்ந்து இருப்பது பார்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. முதுமையிலும் உங்கள் முகம் மிகவும் கலையாக உள்ளது. நீங்கள் ஏதாவது ஒரு சினிமா பாட்டு பாடி போலீசாருக்கு செய்தி அனுப்பினால் ஒரு வேளை அவர்கள் உடனடியாக கண்டு பிடித்து சொல்லலாம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.


பிரபு
ஜூலை 31, 2025 15:56

இவர்களில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் இவர்களின் குடும்பத்துக்கே லாபம்.


அரவழகன்
ஜூலை 31, 2025 15:26

இந்த அவசர யுகத்தில் பெரிசுகள் ஒதுங்கி இளையவர்களுக்கு வழி விடுவது நல்லது...அல்லது பா.ம.க.வை அழித்த அவப்பெயர் ராமதாஸ் என வரலாறு பேசும்..


Subburamu Krishnasamy
ஜூலை 31, 2025 15:17

I think you are expecting your yatra curiously


Balamurugan
ஜூலை 31, 2025 14:08

ராமதாஸ் அவர்களே, வயதிற்கு தகுந்த மாதிரி பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் மீதான மரியாதையை இழக்கும் சூழ்நிலையை உருவாக்காதீர்கள். உங்கள் குடும்ப பிரச்சனைக்காக கட்சியை பாழாக்காதீர்கள்.


Narayanan
ஜூலை 31, 2025 14:06

யாத்திரையை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். போய்க்கொண்டு தானே இருக்கிறது .தைலாபுரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருங்கள் எல்லாம் நன்றகவே நடக்கும் .அன்புமணி இனி கட்சியை பார்த்துக்கொள்ளட்டும் .


Premanathan S
ஜூலை 31, 2025 13:54

மக்கள் உங்களைப் பற்றிக் கவலைப்படவேயில்லை எனவே நீங்களும் நிம்மதியாக இருக்கலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை