| ADDED : ஜன 02, 2025 05:36 PM
சென்னை: ''பெண்கள், குழந்தைகளுக்கு அரசும், போலீசும் பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர், '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் அரசுக்கு கண்டனம். இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருவது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் இப்படி ஒரு நிலை வந்ததற்கு வருந்துகிறேன். காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tlnt2res&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு அரசும், போலீசாரும் பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். பெண்கள் வெளியில் செல்லும் போது, தங்களை காத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.