வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உலக நன்மைக்காக பூஜையாம். அப்படியே நம்பிட்டேன் போங்க...
என்ன படிச்சாலும் தேற மாட்ட
பெரியகுளம் : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டருகே பிரமாண்ட பந்தலிட்டு, மெகா யாகபூஜை நடத்தி திருவாசக முற்றோதல் படித்தார்.நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. கோபூஜை, ஹோமம் நடந்தது. காலை முதல் இரவு வரை சிவனடியார்கள், கட்சியினருக்கு உணவு வழங்கப்பட்டது.போலீஸ், தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தன. இன்று இரண்டாம் நாளில் லட்சுமி சுதர்சன ஹோம பூஜை செய்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.உலக நன்மைக்காக யாக பூஜை நடந்தது எனக்கூறப்பட்டாலும், அரசியல் தடைகளை தகர்த்து மீண்டும் பிரகாசிக்க வேண்டும் என்ற நோக்கில் பூஜைகள் நடந்ததாக, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
உலக நன்மைக்காக பூஜையாம். அப்படியே நம்பிட்டேன் போங்க...
என்ன படிச்சாலும் தேற மாட்ட