உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் பள்ளம் தோண்ட அனுமதி அவசியம்: மின் வாரியம் அறிவுறுத்தல்

சாலையில் பள்ளம் தோண்ட அனுமதி அவசியம்: மின் வாரியம் அறிவுறுத்தல்

சென்னை:தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதனங்களின் பழுதால் மின் தடை ஏற்படுகிறது.தற்போது, பள்ளிகளில் விரைவில் பொது தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், செய்முறை தேர்வுகள் துவங்கியுள்ளன. எனவே, தேர்வு மையங்களுக்கு தடையில்லாமல், மின் வினியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு, பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, மின் சாதனங்களை கண்காணிக்கும்படி தெரிவித்துள்ளது. மேலும், குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை துறை, தொலைதொடர்பு நிறுவனங்கள், சாலைகளில் பள்ளம் தோண்டும் போது, மின் சாதனங்களை பழுதாகாமல் இருக்க, பணிகளை மேற்கொள்ளும் முன் அனுமதி பெற அறிவுறுத்துமாறும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை