உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறைமலை அடிகள் பேத்தி வீடு கேட்டு  மனு அளிப்பு

மறைமலை அடிகள் பேத்தி வீடு கேட்டு  மனு அளிப்பு

தஞ்சாவூர்: தமிழ் தந்தை என போற்றப்பட்டவர் மறைமலை அடிகளார். இவரது மகன் பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா, 43, பி.காம்., பட்டதாரி. இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசிக்கிறார். லலிதாவின் கணவர் செந்தில்குமார், 52, மாவு மில் ஒன்றில் வேலை பார்க்கிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் லலிதா, நேற்று கலெக்டர் அலுவலகத்தில், 'குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும்' என மனு அளித்தார்.மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், வீடு வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

பின், லலிதா கூறியதாவது:

என் கணவர், மாவு மில்லில் வேலை செய்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம். வாடகை கொடுப்பதற்கு வருமானம் இல்லாத காரணத்தால் குடிசை மாற்று வாரியத்தில் வீடு தர வேண்டும் என கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன்.மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்து, ஓராண்டாக காத்து இருக்கிறேன். எனவே, கலெக்டர் என் மனுவை ஆய்வு செய்து, வீடு மற்றும் மகளிர் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Neelachandran
நவ 27, 2024 12:11

மிகவசதியான கவிஞருக்கும் எம்பிக்கும் ஒருகோடி ரூபாய்க்கு வீடு கொடுத்த அரசு தனித்தமிழ் முன்னோடியான வேதாசலம் அவர்களின் பேத்திக்குக் கொடுக்கக் கூடாதா


karthik
நவ 26, 2024 10:00

நான்தான் தமிழை வளர்த்தேன் என்று ஊரை நம்பவைத்து ஒரு குடும்பம் ஆயிரம் ஆயிரம் கோடி பல பத்து தலைமுறைக்கு தேவையான சொத்து சேர்த்துவிட்டது..உண்மையில் தமிழை நேசித்த வாழவைத்த குடும்பங்கள் வறுமையின் பிடியில் இருக்கு.. என்ன நாடு இது


Prasad VV
நவ 26, 2024 07:49

எத்தனையோ ஏழைகள் உள்ளனர் அவர்களில் இவரும் ஒருவர். வீடு ஏன் தர வேண்டும்? பாட்டனாரின் பேரை சொல்லி கேட்பது சரியல்ல.


Mani Vellachamy
நவ 26, 2024 05:48

பெத்தம்மா கேட்டா பங்களாவே கொடுப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை