உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி - விருதுநகர் ரயிலை துாத்துக்குடி வரை நீட்டிக்க மனு

திருச்சி - விருதுநகர் ரயிலை துாத்துக்குடி வரை நீட்டிக்க மனு

சென்னை:'திருச்சி - காரைக்குடி - விருதுநகர் ரயிலை, துாத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்' என, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து சார்பில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அந்த அமைப்பின் தென்மண்டல செயலர் சுந்தர் கூறியதாவது: துாத்துக்குடி முக்கிய தொழில் மற்றும் துறைமுகம் நகராக இருக்கிறது. எனினும், திருச்சி போன்ற முக்கிய நகரங்களை இணைக்க, போதிய அளவில் ரயில் வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. மருத்துவம், வேலை, கல்வி மற்றும் வணிக தேவைகளுக்காக, துாத்துக்குடியில் இருந்து, பல்லாயிரக்கணக்கானோர் சாலை போக்குவரத்தில் பயணம் செய்து வருகின்றனர்.திருச்சி - காரைக்குடி பயணியர் ரயில், காரைக்குடி - விருதுநகருக்கு ஒன்றிணைப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை துாத்துக்குடி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த ரயில் நீட்டிக்கப்பட்டால், துாத்துக்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருச்சிக்கு நேரடி ரயில் வசதியை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Seyed Omer
ஏப் 23, 2025 19:42

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கிழக்கு கடற்கரை சாலை ,மகாபலிபுரம், பாண்டிச்சேரி, காரைக்கால், பட்டுக்கோட்டை, கீழக்கரை,ராமநாதபுரம், சாயல்குடி,தூத்துக்குடி,ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருசெந்தூர் ,உடன்குடி, திசையன்விளை,வழியாக கன்னியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும்.3மேலும் மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ஆறுமுகநேரி,காயல்பட்டினம்,வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும்?


veeramani
ஏப் 23, 2025 09:30

செட்டிநாட்டு சிட்டிசன் பதில் ... தூத்துக்குடி நபர் திருச்சி காரைக்குடி, காரைக்குடி- விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிப்புச்செய்யவேண்டும் என கத்தியுள்ளார். அய்யா.. முதலில் எழுபதுகளில் திருச்சி- மானாமதுரை ரயில் மட்டும்தான் சென்றது. பின்னர் காரைக்குடி திருச்சி ரயில் எண்பதுகளில் இருந்து நடைமுறைக்கு வந்தது . அருப்புக்கோட்டை விருதுநகர் நரிக்குடி, திருச்சுழி மக்களின் வேண்டுகோள்படி காரைக்குடி விருதுநகர் வரை ரயில் ஓடிக்கொண்டுள்ளது காலை 600மணிக்கு விருது நகரில் கிளம்பி 920மணிக்கு காரைக்குடி வந்து பின்னர் 1200மணியளவில் திருச்சி செல்கிறது. பின்னர் மாலை 345மணிக்கு திரும்ப காரைக்குடி புறப்பட்டு விருதுநகருக்கு இரவு 830மணிக்கு சென்றடைகிறது. உடனடியாக கோச்சிக்கல் துப்புரவு, பராமரிப்பு செய்யப்படுகிறது. இதில் எங்கு நேரம் உள்ளது இந்த ரயிலை தூத்துகுடி வரை நீடிப்பது முடியாத . வெறும் பபிளிசிட்டிக்காக எதையும் சொல்லுதல் கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை