உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையா! ஐகோர்ட் போட்ட ஆர்டர்

ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையா! ஐகோர்ட் போட்ட ஆர்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருமாறு தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார்.வழக்கு விசாரணையின் போது பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தால் அதன் விலை கணிசமாக குறையும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட், ஜி.எஸ்.டி.,க்குள் சேர்க்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க அவகாசம் அளிப்பதாக கூறியது. ஏற்கனவே கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தற்போது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட், 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

jayvee
செப் 28, 2024 17:45

அரசு கொள்ளை அடிப்பதே சாராயத்திலும் பெட்ரோல் டீசலிலும்தான் ..அதற்கும் ஆப்பா ? ஒருபுறம் சொத்துவரி மின்சார கட்டணம் பஸ் கட்டணம் என்று பலவாறாக கொள்ளை ..


Natarajan Ramanathan
செப் 12, 2024 23:09

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவந்தால் சாராயத்தையும் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர உடனே ஒரு வழக்கு போட வேண்டும்.


Ravi Kulasekaran
செப் 12, 2024 07:44

மத்திய அரசு பதில் என்ன மத்திய அரசு சார்பில் எனது பதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி கூறுவது ஜிஎஸ்டியின் கிழ் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதிக்க மறுப்பு


தாமரை மலர்கிறது
செப் 11, 2024 20:05

வரி போடுவது அரசின் வேலை. கோர்ட்டின் வேலை அல்ல.


அருணாசலம்
செப் 11, 2024 18:24

இரு தரப்பு வாதங்கள் கேட்ட பின் என்று செய்தியில் உள்ளது. மனுதாரர் சரி. அடுத்த தரப்பு யாரு?


Ganapathy
செப் 11, 2024 17:03

மத்தியரசுக்கு மட்டும் எதுக்கு நோட்டீஸ்? மாநில அரசுகள் அதில் வருமானம் பார்பதில்லையா? அதிகம் ஜிஎஸ்டி வருமானம் போவதே மாநிலங்களுக்குத்தான்.


Ganapathy
செப் 11, 2024 16:42

ஜிஸ்டி கவுன்ஸில் என ஒன்று இருப்பதும் அதில் அனைத்து மாநில உறுப்பினர்களும் இணைந்து ஜிஎஸ்டி-ல் எந்த பொருள்கள் மீது வரிவிதிக்கலாம் என கூடி பேசி முடிவெடுப்பதும் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியுமா இல்லை அதற்கும் வழக்கம்போல மோதி ஆர்எஸ்எஸ் பாஜக சங்கி ஹிந்துத்வாதான் காரணமா?


Ganapathy
செப் 11, 2024 16:37

முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள்தான்


Narayanan
செப் 11, 2024 15:55

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை . பருப்பு விலைகளை நாங்கள் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்து குறைத்து விடுவோம் என்றார்கள் . இன்று அனைத்து உணவுப்பண்டங்களும் கட்டுக்கடங்காமல் ஏறுமுகமாகத்தான் இருக்கிறது .


Sundar R
செப் 11, 2024 14:43

State Government peoples are irrelevant persons in all the schemes issued by the Central Government because all schemes are implemented only after passing in both the houses. Tamil Nadu peoples are the beneficiaries & have all rights to enjoy all the schemes of the Central Government. DMK people have no business to interfere. They are irrelevant persons between Central Government Schemes and Tamil Nadu people.


சமீபத்திய செய்தி