உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவின் பிரம்மோஸ்க்கு கூடியது மவுசு; வாங்க முண்டியடிக்கும் நாடுகள்!

இந்தியாவின் பிரம்மோஸ்க்கு கூடியது மவுசு; வாங்க முண்டியடிக்கும் நாடுகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன.ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தியது. இந்த ஏவுகணை, பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி சேதப்படுத்தியது.இதனால் பிரம்மோஸ் ஏவுகணை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை காட்டிலும் விலை குறைவு என்பதால் இதை வாங்குவதற்கு பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.பிரம்மோஸ் ஏவுகணை என்பது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பு ஆகும். பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மஸ்க்வா நதிகளின் பெயர்களை இணைத்து, பிரம்மோஸ் என்று பெயரை இரு நாடுகளும் இணைந்து சூட்டின. இந்த ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒப்பந்தங்கள் செய்துள்ளன.

ஆர்வமுள்ள பிற நாடுகளின் பட்டியல்!

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வரும் நாடுகள் பின்வருமாறு:1.தாய்லாந்து2. சிங்கப்பூர்3. புருனே4. எகிப்து5. சவுதி அரேபியா6. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்7. கத்தார்8. ஓமன்9. பிரேசில்10. சிலி11. அர்ஜென்டினா12. வெனிசுலாஇந்த நாடுகள், குறிப்பாக கடலோர மற்றும் கடற்படை பாதுகாப்புத் துறைகளில், தங்கள் பாதுகாப்பு ஆயுதங்களை மேம்படுத்த பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளன.

சிறப்புகள் இதோ!

இந்த அதிவேக பிரம்மோஸ் ஏவுகணை 290 முதல் 400 கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரி இலக்கை தாக்கும் திறன் பெற்றது. அதிகபட்சமாக 650 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.இதனை போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

KRISHNAMURTHY. K
மே 16, 2025 23:23

பிரம்மோஸ் ஏவுகணையை விற்பதற்கு ரஷ்யாவின் அனுமதி பெறவேண்டும்.


Kumar Kumzi
மே 17, 2025 10:59

யார்ர்ரா திராவிஷ கொத்தடிமையா விலகு விலகு ....த்தூ


Ganapathy
மே 16, 2025 18:51

இந்த ஆர்டர்கள் கிடைக்க காரணமான பாகிஸ்தான் நம்மகிட்ட நாளைக்கு கமிஷன் கேட்டாலும் கேப்பானுங்க


JG Krishna
மே 16, 2025 17:36

பிரம்மோ சிங் ரியல் லைஃப் சோதனை பாகிஸ்தானில் நடத்திக் காட்டியதால் இந்தியாக்கு வந்த லாபம் தேங்க்ஸ் டு பாகிஸ்தான்


JAINUTHEEN M.
மே 16, 2025 16:25

இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகி வெற்றிக்கொடி நாட்டும் பிரம்மோஸ் ஏவுகணை இந்திய ராணுவத்துக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். பணத்துக்காக மற்றைய நாடுகளுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். ஜெய் ஜவான். ஜெய்ஹிந்த்.


கூற முதலி
மே 16, 2025 15:58

பிரம்மோஸ் ஏவுகணையை விற்கக் கூடாது. நம்மகிட்ட இருந்து வாங்கி நம்ம மேலேயே ஏவி விட்டானுங்கனா என்ன பண்ணுவீங்க பிரம்மோஸ் ஏவுகணை விக்காதீங்க வேணும்னா அதுல எதுனா மாத்தி வித்துருங்க சைனாக்காரன் மாதிரி எதனா மாத்தி வித்திருங்க


RAMAKRISHNAN NATESAN
மே 16, 2025 13:38

சிறப்புக்களில் ஒரு முக்கியமான பாயிண்ட் விடுபட்டது : இன்றைய தொழில்நுட்பத்தில் இதை கண்கானித்துத் தடுப்பது இயலாத காரியம் ....


karthik
மே 16, 2025 12:16

இதில் கத்தார் ஓமான் போன்ற நாடுகளை நம்பி குடுக்க முடியாது


Rathna
மே 16, 2025 11:27

இந்தியா பாக்கிஸ்தான் போரய் அமெரிக்கா சமரசம் செய்தது என்பது தவறு. பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி இரண்டு முறை இந்திய ராணுவ அதிகாரிக்கு போன் செய்து போர் நிறுத்தத்தை தொடங்குமாறு வேண்டிக்கொண்டதால் அது நடந்தது. அதற்கு முந்தய நாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகன் 60 மில்லியன் bitcoin ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுடன் மறைமுக செய்து கொண்டது வெளியில் வந்துள்ளது. இவ்வளவு திருட்டையும் செய்யும் அமெரிக்கா ஒரு மூன்றாம் தர நாடு என்பது வெளிப்படை. ப்ரஹ்மோஸ் ஏவுகணை விற்பனை இந்தியாவை உலக ராணுவ விற்பனை சந்தையில் நிலை நிறுத்தும். 2014 இல் 650 கோடியாக இருந்த இந்திய ராணுவ ஏற்றுமதி 2024இல் 24000 கோடியாக - 3500% மேல் உயர்ந்து உள்ளது. இது மிக பெரிய வெற்றி.


Karuthu kirukkan
மே 16, 2025 10:42

Apathukatha Sivathanu Pillai was born in Nagercoil in Kanyakumari District, Tamilnadu on 15 July 1947. He completed his schooling at D.V.D. Higher Secondary School, Nagercoil,. He earned his Bachelor of Electrical Engineering from Thiagarajar College of Engineering[10] in 1969.[10] In 1991, he attended the six-week Advanced Management Program at Harvard Business School. He then earned PhD in Technology Management from Savitribai Phule Pune University in 1996.[11] Pillai is a close and personal friend[12] of Former President of India APJ Abdul Kalam Date of Birth is 15 July 1947. ● A. Sivathanu Pillai the Indian scientist, was born in Nagercoil. ● Father: Ayyan Pillai - Occupation: Farmer Mother: Sivakami - Occupation: Homemaker.


M. PALANIAPPAN, KERALA
மே 16, 2025 10:39

வாழ்க இந்தியா, ஜெய்ஹிந்த்


சமீபத்திய செய்தி