உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடி அகழாய்வில் கிடைத்த குழாய்கள்

கீழடி அகழாய்வில் கிடைத்த குழாய்கள்

கீழடி : கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில், 10ம் கட்ட அகழாய்வு நடக்கிறது. ஆறு குழாய்கள் இணைக்கப்பட்ட, 174 செ.மீ., நீளம் கொண்ட வடிகால் சுடுமண் குழாய் போன்ற அமைப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது. அதுபோல, ஏழாம் கட்ட அகழாய்வு பணியின் போது, அருகில் உள்ள அகரம் என்ற இடத்தில் இதேபோன்ற குழாய் அமைப்பு சற்று சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது.இதனால், கீழடி, அகரத்தில் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மக்கள் வசித்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. சுடுமண் குழாய்கள் ஒருபுறம் குறுகியும் மறுபுறம் அகலமாகவும் இருப்பதால் இணைப்புக் குழாயாகவே பயன்படுத்தி இருக்க வாய்ப்புஉள்ளது.இந்த சுடுமண் குழாய்கள் தண்ணீர் கொண்டுசெல்ல பயன்பட்டதா என, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ