உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!

கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!

கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் நேற்றிரவு 8.15 மணிக்கு புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது.பின்னர் மீண்டும் விமானம் கோவைக்குத் திரும்பியது. பின்னர் கோவை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத் செல்ல இருந்த விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, இரவு 11.30 மணிக்கு ஹைதராபாத் புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
மார் 04, 2025 11:46

இந்த செய்தியால் யாருக்கு என்ன கிடைக்கப்போகிறது. பயணங்களில் சில சமயங்களில் தடைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. மாற்று ஏற்பாடு செய்துகொண்டு பயணத்தை தொடரவேண்டியதுதான். இத்தகைய செய்திகளை தவிர்க்கலாமே . உங்களுக்கு இடம் காலியாக இருந்தால் அப்பாவின் இன்றைய உளறல் வெளியிட்டால் சிரிக்கவாவது செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை