உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் இயக்கம்: துவக்கி வைத்தார் தலைமை செயலர்

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் இயக்கம்: துவக்கி வைத்தார் தலைமை செயலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் நீர் நிலைகளில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இயக்கத்தை, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில், தலைமை செயலர் முருகானந்தம் நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தில், 14 இடங்களில் அறிவிக்கப்பட் ட பறவைகள் சரணா லயங்கள் உள்ளன. இவை இடம் பெயரும் பறவை இனங்களுக்கும், அந்தந்த பகுதிகளில் வாழும் பறவை இனங்களுக்கும், முக்கிய வாழிடமாக உள்ளன. சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துக்கு அப்பாற்பட்டு, சரணாலயங்கள் ஈர நிலைகளை பாதுகாக்கின்றன. மீன் வளத்தையும் பெருக்குகின்றன. கார்பன் கூறுகளை சேமிக்கின்றன; உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகின்றன. முன்னிலை இத்தகைய நுட்பமான சூழலை காப்பதற்கான, முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் நேற்று, தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள், பாதுகாப்பு காப்பகங்கள் மற்றும் முக்கிய நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இயக்கம் துவக்கப்பட்டது. இந்த பணியை, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முரு கானந்தம் பேசியதாவது: தமிழகம் எப்போதும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில், முன்னிலையில் இருந்துள்ளது. மாநிலம் முழுதும் பறவை சரணாலயங்கள், நீர் நிலைகளில் நடந்த துாய்மை இயக்கம், மிகப்பெரிய மக்கள் இயக்கமாக தொடர வேண்டும். வாழிடம் இதன் வாயிலாக, நமது ஈர நிலைகளை மீட்டெடுத்து, விலங்குகளுக்கு பாதுகாப்பான வாழிடத்தை உருவாக்க வேண்டும். மக்கள், அரசு ஒன்றிணைந்து செயல்படும் போது, நமது உயிரினப்பன்மையை காக்கும் உறுதியை வலுப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் பேசினார். சுப்ரியா சாஹு பேசும்போது, ''தமிழகம், மத்திய ஆசிய பறவை பாதையில் உள்ள முக்கியமான மாநிலம். ''பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் துாய்மை இயக்கம், பிளாஸ்டிக் மாசுக்கு எதிராக அனைவரையும் சாம்பியன்களாக மாற்றும். பறவைகள், உயிரினப் பன்மைகளை பாதுகாக்க, பிளாஸ்டிக் இல்லாத வாழிடத்தை வழங்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Murugasamy D
செப் 02, 2025 15:18

நெகிழி பொருள்கள் உட்ப்பத்தி குறைக்காமல் சேகரித்து இனொரு இடத்தில் குவித்து என்ன 10 ரூபாய் குளிர் பானம் பாட்டில் 300மேல் தண்ணீர் பாட்டில் எல்லாம் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விட்பதை தடை செய்ய உடனே ஆணை இடுங்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த பூமி உயிரோடு வேண்டும்


சிட்டுக்குருவி
ஆக 31, 2025 06:39

மக்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை கண்டபடி வீசுவது சுகாதார கேடு என்பதை அன்றாட அறிவுறுத்தலாக கொள்ளவேண்டும் .புகைபிடிப்பது சுகாதார கேடு என்பதைப்போல டிவி,சினிமா தியேட்டர் ,அன்றாட செய்தித்தாள்களில் அறிவுறுத்தல் இருக்கவேண்டும் .பொதுமக்கள் கூடும் இடங்களில் ,பஸ் நிலையங்களில் ,ரயில் நிலையங்களில் ,மக்கள் நடமாடும் சாலைகளில் எல்லாம் மறுசுயற்சி செய்யும் பிளாஸ்டிசிக்குகள் போடுவதற்கு பெரிய குப்பை கூடைகளைவைக்கவேண்டும் .அந்தக்கூடைகளில் பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சுகாதார கேடுகளை பற்றிய வாசகங்கள் இருக்கவேண்டும் .அவைகளை அவ்வப்போது அகற்றும் பணிக்கு தகுந்த ஆட்களை நியமிக்கவேண்டும் .பிளாஸ்டிக் கழிவுகளை போது இடங்களிலிருந்து பொருக்கி எடுத்துகொண்டுவருபவர்களுக்கு எடைக்குதகுந்தாற்போல் காசு கொடுக்கவேண்டும் .அந்தக்காசை பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தும் வியாபாரிகளிட த்தில் இருந்து அவர்கள் உபயோகிக்கும் பைகளுக்கேற்றாற்போல் வசூலிக்கவேண்டும் . அதை மோத் தவியாபாரிகள் வசூலித்து அரசுக்கு செலுத்தவேண்டும் .தவிரவும் முதல்முறை சிறுகுற்றங்களுக்காக குறைந்த தண்டனை பெரும் குற்றவாளிகளைவைத்து முக்கியமான இடங்களில் அகற்றும் செய்து ஈடாக தண்டனை குறைக்கலாம் .தீயிட்டு கொளுத்துவது கேன்சரை காசில்லாமல் வாங்குவது ,சிறு அபராத குற்றமாக்கப்படவேண்டும் .


VSaminathan
ஆக 31, 2025 05:08

அய்யா தலைமைச் செயலரே முதல்ல பப்ளிக் அனுப்புற மெயில் மற்றும் கடிதங்களுக்கு பதில் போடுங்க-பொய் பொய்யா பேசிட்டு திரியாதிங்க-எவனாவது ஒருத்தன் ஹைகோர்ட்ல ரிட் பைல் பண்ணினானோ அதுவும் தலைமைச் செயலரா பதவி வகிக்கவே தகுதியற்றவர்னு ப்ரூவ் பண்ணிடப் போறானுக-கடந்த மூணு வருஷமா நானும் தமிழக அரசோட முட சோம்பேறி இயக்கத்தை வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன்- மோடியோட செகரட்டரிகள் இப்படி இல்லை-படு சுறுசுறுப்பா இருக்கானுக-ஒரே ஒரு சாம்பிள் சொல்லவா?திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கட்டிடத் தொழிலாளி கேன்சரால மரணமடைஞ்சப்போ அவரோட பொண்டாட்டிக்கு ஒரு மகனை படிக்க வைக்கிறதுக்கு எந்த வித வசதியுமிருக்கலை-அதைத் தெரிஞ்சுகிட்டு அவரோட சொந்தக்காரர் கொச்சியில எங்கூட ஷேரிங் டெண்ட்ல தங்கியிருந்தாரு-அதனால அந்த அம்மாவோட நிர்க்கதியான சூழ்நிலையை அய்யா மோடிக்கு தெரிவிச்சேன்- அதுவும் இ மெயில்ல தாண்டா-அரசு படத்துல வடிவேலு சொல்றா மாதிரி நாலு நாள்ல பறந்துச்சு ஆர்டர்-உங்க இத்த பய கவர்மெண்டுக்கும் லெட்டர் அனுப்பினாங்க-நீங்க ரொம்ப சாமர்த்தியமா அவங்க ஊரு வி ஏ ஓ வை நொட்டி அவரு தலையாரியை ஏவி கடைசியில பிரதமர் நிவாரண நிதியிலேர்ந்து ஒரு 48,000/- ஸ்பாட் கேஷ் கிடைச்சுது அவங்களுக்கு-முதல்ல வாங்குற சம்பளத்துக்கு வேலைய பாருங்கடா அந்த பொம்பளைய ஹைகோர்ட்டு தள்ளி விட்றுந்தேன்னா என்ன பண்ணுவ-எப்படி நீங்க அந்த அம்மாவுக்கு செய்யுற சமூக உதவி திட்டத்தோட அரசாணையை அந்த அம்மாவோட பார்வைக்கு அனுப்பாம கூப்பிட்டு விடுவே- படிக்காதவனுகளுக்கு ஒரு நீதி படிச்சவனுக்கு ஒரு நீதின்னு செயல்படாதீங்கடா-இதையா நீ ஐ ஏ எஸ் கோர்சுல படிச்சே?


Iyer
ஆக 31, 2025 04:18

இது ஒரு நல்ல இயக்கம். பொது மக்கள் அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்து - உதவவேண்டும்.


சமீபத்திய செய்தி