உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை ஓட்டுன மாதிரி அமைச்சர் மூர்த்தியை ஓட்டுங்க: செல்லுார் ராஜூ லகலக

என்னை ஓட்டுன மாதிரி அமைச்சர் மூர்த்தியை ஓட்டுங்க: செல்லுார் ராஜூ லகலக

மதுரை: 'ஏற்கனவே பூமிபூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை போட்ட அமைச்சர் மூர்த்தி, மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான என்னிடமும், மக்களிடம் மாட்டிக் கொண்டார்.தெர்மோகோல் விஷயத்துக்காக என்னை 'ஓட்டுனதை' போல அமைச்சர் மூர்த்தியையும் நீங்கள் 'ஓட்டுங்க' என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கிண்டலாக கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: போட்ட ரோட்டுக்கு மறுபடியும் பூமிபூஜை போடுறார் அமைச்சர் மூர்த்தி. அவர்கிட்ட இந்த ரோடுக்கு ஏற்கனவே பூமிபூஜை போட்டாச்சுனு அதிகாரிகள் சொல்லிருந்தா போயிருப்பாரா; போயிருக்கமாட்டார். அவர்கிட்ட அதிகாரிகள் சொல்லல. கூட்டிட்டு போய் அமைச்சரை மாட்டி விட்டுட்டாங்க.இப்ப மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான என் கிட்டயும் மக்கள்கிட்டயும் அமைச்சர் மூர்த்தி மாட்டிகிட்டாரு. இதுமாதிரி அதிகாரிகள் சொல்லித் தான், நான் போய் தெர்மோகோல் போட்டது. அதிகாரி சொல்லித்தானே அமைச்சர்கள் போறாங்க. தெர்மோகோல் விஷயத்துல என்னை மட்டும் 'ஓட்டுனீங்க', இப்ப முடிஞ்சா அமைச்சர் மூர்த்தியையும் 'ஓட்டுங்க'. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kishore kumar
ஏப் 15, 2025 20:26

pothu veliyil aruvarukkathakka pesum minister vida ivar thevalam


RAINBOW
ஏப் 15, 2025 15:47

அய்யா செல்லூர் ராஜூ அவர்களே உங்களை ஓட்டுவது ஒரு மாமன் மச்சான் பங்காளி உறவினர் ஓட்டுவது போல. அதற்கு எதற்கு வருத்தப்படுகிண்டீர். நீங்கள் எங்கள் செல்லம்


visu
ஏப் 15, 2025 13:01

நீர் அவசியத்தை தடுக்க தெர்மகோலை போட்டது சரியான செயல்தான் ஆனால் அதை ஏரி குளம் குட்டை போன்ற சிறிய இடங்களிலேதான் செய்யவேண்டும் பெரிய இடங்களில் frame அமைத்து போட்டால்தான் காற்றில் பறக்காமல் இருக்கும் பெரிய frame போட்டு அதில் சோலார் பேனல் பொருத்தி மின்சாரம் தயாரிப்பு +நீர் ஆவியாவதை தடுக்கும் முறை அமுலில் உள்ளது


Anbuselvan
ஏப் 15, 2025 11:12

நீங்களும் தெர்மோகோல் வைப்பதற்கு பதிலாக இரண்டு முறை பூஜை போட்டு இருந்தால் உங்களை ஒட்டி இருக்க மாட்டார்கள் என தோன்றுகிறது. ஆனாலும் நீங்க நம்ம கிராமத்து விஞ்ஞானி. என்ன உங்களை சுற்றி பல IAS அதிகாரிகள் இருந்திருப்பார்கள் அப்போது - அவர்களை நீங்கள் ஆலோசித்து இருக்கலாம். இதை விடுங்க. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக பிஜேபி கூட்டணிக்குதான் மக்கள் வோட்டு போடுவாங்க.


ஆரூர் ரங்
ஏப் 15, 2025 10:32

ஸ்டிக்கர் மட்டும் ஒட்டியிருந்தால் குறைந்த செலவில் நிறைந்த பலன் கிடைத்திருக்கும்.


Yes your honor
ஏப் 15, 2025 10:32

ஆமாம், அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். போன்ற பெரிய படிப்புகளை படித்துவிட்டு வருகிறார்கள். அவ்வாறு படித்துவிட்டு யாரும் அவர்களுக்கு மேலதிகாரியான அமைசர்கள்? நாசர், செல்லூர் ராஜு போன்ற இந்த அதிமேதாவிகள் தான் அதிகாரிகளுக்கு டைம் பாஸ். போரடிக்கும் பொழுது இவர்களை வைத்து செய்துவிடுவார்கள். அவர்களுக்கும் டைம்பாஸ், பொதுமக்களாகிய நமக்கும் ஜாலி டைம்பாஸ். இரண்டு நாட்களில் அவர்களும் மறந்து விடுவார்கள், நாமும் மறந்து விடுவோம். எல்லாம் ஒரு ஜாலி தான்.


Anantharaman Srinivasan
ஏப் 15, 2025 10:16

செல் அரித்த ராஜு. மீண்டும் பழைய குப்பையை கிளறி உங்க மதிப்பை நீங்களே கெடுத்துக்கிறீங்களே.


Selraju
ஏப் 15, 2025 09:24

உங்களுக்கும் மூளை இல்லை நீங்கள் தேர்வு செய்த அதிகாரிக்கும் மூளை இல்லை.


sankaranarayanan
ஏப் 15, 2025 09:21

ஒவ்வொரு பூஜைக்கு இவ்வளவு செலவாச்சு என்று எழுதி விடுவார்கள் அங்கே சாலை போட்டார்களா இல்லையா என்று யாருமே கேட்க மாட்டர்கள் பூஜை நன்றாக நடந்ததா என்றுதான் கேட்பார்கள் இதுதானய்யா திராவிட மாடல் அரசின் மஹிமை


Venkateswaran Rajaram
ஏப் 15, 2025 09:01

இவர்கள் ஊழல் செய்வதும் லஞ்சம் வாங்குவதும் எல்லாமே அதிகாரிகளை வைத்து தான் ஏதாவது பிரச்சனை என்றால் இது மாதிரி சொல்லி இவர்களை விடுவித்துக் கொள்வார்கள்.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளோ தாநும் அதில் சுகத்தை அனுபவித்ததினால் அந்த சங்கடத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை