உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 19ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

19ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: சென்னையில், வரும் 19ம் தேதி நடக்க உள்ள, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில், வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை, 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் - 2023' நடக்க உள்ளன.போட்டிகளில், 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 6,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங் கனையர், 1,600 பயிற்சியாளர்கள், 1,000 நடுவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த ஆண்டு, 27 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், காட்சி விளையாட்டுகளில் இடம் பெற்றுள்ளது.போட்டிகளின் துவக்க விழா, வரும் 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடக்க உள்ளது.விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.விழாவில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RaajaRaja Cholan
ஜன 13, 2024 21:04

நீ என்னை கூப்பிடுவது போல அரசியல் பண்ண நினைத்தாய் , நான் அங்கு வந்து அதை விட பெரிய அரசியல் விளையாட்டு உனக்கு காட்டுகிரேன் என்கிறார் பிரதமர் , பார்க்க தானே போகிறாய் இந்த மோடியின் ஆட்டத்தை , கத்துக்குட்டி எல்லாம் டெல்லி சென்று அரசியல் ஆட்டம் காண்பிக்க பார்த்தது, இது தான் உன் விரலை வைத்து உன் கண்ணை உன்னைஏ குத்த வைப்பது


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 13, 2024 12:25

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக விரதம் இருக்கிறார் பிரதமர். நெற்றியில் சந்தனம், குங்குமம் அணிந்து அல்லது விபூதி, குங்குமம் அணிந்து அல்லது திருமண் அணிந்து வரக்கூடும். பார்க்க அழகாக இருக்கும்.


R. Vidya Sagar
ஜன 13, 2024 12:06

கேலோ இந்தியா என்றால் என்ன என்று ஹிந்தி தெரியாது போடா என்று சட்டை போட்டுக்கொண்டு உதயநிதி விளக்குவார்


VENKATASUBRAMANIAN
ஜன 13, 2024 09:16

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாச்சு. இனிமேல் நாவடக்கம் இருக்கும். மோடியின் குறி காங்கிரஸ் திமுக இல்லை. காங்கிரஸ் குறைந்த சீட் பெற வேண்டும். அப்புறம் திமுகவை பார்த்து கொள்ளலாம்.


அப்புசாமி
ஜன 13, 2024 08:47

பிரதமர் வருகையை ஒட்டி சென்னையை சுத்தம் செய்ய வே ண்டும்


Siva
ஜன 13, 2024 07:42

பிரதமர் இறங்கி வந்து அடிக்க போகிறார். நேரு விளையாட்டு அரங்கில் மோடி ஜி என்ன செய்ய போகிறார் பார்க்கலாம்.


Ramesh Sargam
ஜன 13, 2024 07:28

மீண்டும் தமிழக முதல்வருக்கு தூக்கம் போச்சு.


sankaranarayanan
ஜன 13, 2024 05:51

விளையாட்டுப்பிள்ளையின் விளையாட்டுத்தனமாக விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கூட பிரதமர் மனது இறங்கி தரம் பதவி இவைகள் பார்க்காமல் வருவது போற்ற வேண்டிய விஷயம் துணை முதல்வருக்கு நல்ல நேரம் இது அரசியல் விளையாட்டில் சற்று சாமர்த்தியமாக தாத்தாவைப்போல இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி சென்றால் நல்ல பெயர் எட்டலாம்


Marai Nayagan
ஜன 13, 2024 05:38

திமுக உழல் அமைச்சர்கள் ஆட்சி கலைக்க படாமல் இருக்க ஸ்டாலின் உதயநிதி பல முயற்சிகள் செய்வது கருணாநிதி கற்று கொடுத்த உததி ...இனி ஆகாது


Mani . V
ஜன 13, 2024 04:07

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை சந்திக்கவா? ம், எவ்வளவு இறங்கிப் போனாலும், ஏறி அடிச்சாலும் கூட்டணிக்கு ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறாங்களே.


vadivelu
ஜன 13, 2024 06:48

எதிர்ப்பது போல் ஊரை ஏமாற்றும் கோமாளிகள் போதும் என்று நினைத்து விட்டார்.


மேலும் செய்திகள்