உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் வருகை தமிழகத்திற்கு பெருமை; அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்

பிரதமரின் வருகை தமிழகத்திற்கு பெருமை; அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்

சென்னை; ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது தமிழகத்திற்கு பெருமை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த தினம், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் 1000வது ஆண்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கம் ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் ஆடித் திருவாதிரை திருவிழாவாக ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை மத்திய அரசு கலாசார அமைச்சகம் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடுகிறது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி ஜூலை 27ம் தேதி நடக்கிறது. அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவரின் வருகை தமிழகத்திற்கு பெருமை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார். இது குறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டி; கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகர். அவரின் கடல் கடந்த படையெடுப்பின் ஆயிரமாவது ஆண்டு விழாவை குறிக்கக்கூடிய வகையில், பிரதமர் மோடி வரும் 27ம் தேதி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வர உள்ளார். இது தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய ஒரு பெருமையாக நாங்கள் கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Arachi
ஜூலை 26, 2025 09:10

தமிழ் நாட்டை ஆளுவதற்கு ஒரு தகுதி வேண்டும். அது தற்போதைய முதல்வருக்கு இருக்கு. மிசாவை சந்தித்தவர். காலில் விழுந்து ஆட்சிக்கு வரவில்லை.


Arachi
ஜூலை 26, 2025 08:50

தமிழனின் காலைதான் எவனும் பிடிப்பான். ஏனெனில் இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு. பிரதமர் , முதல்வருக்கு கொடுக்கும் மரியாதையே வேற லெவல். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மரியாதை இருக்கும். எப்படியாவது தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்கணும்னு அலைவரனுக்கு கொடுக்கும் மரியாதையை கவனிச்சா தெரியும்.


metturaan
ஜூலை 26, 2025 07:16

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை... நிரந்தர நண்பனும் இல்லை.... எல்லாமே சந்தர்ப்பவாதம் தான்


K.n. Dhasarathan
ஜூலை 25, 2025 21:21

பிரதமரின் தமிழ்நாட்டு சேவைகளை மறக்க முடியுமா ? தூத்துக்குடி வெள்ளத்திற்கு அடுத்தடுத்து மூன்று குழுக்களை அனுப்பி கடைசியில் ஒரு ரூபாயையும் கொடுக்காதவராச்சே கடைசியில் நீதி மன்றம் செல்லப்போவதை அறிந்து வெறும் 200 கோடியை மூக்கால் அழுது கொடுத்தவர். அதே நரம் வாடா கிழக்கு மாநிலங்களுக்கு வெல்ல சேதம் என்றதும் 1200 கோடி, மறுநாளே கொடுத்த வள்ளல் தமிழகத்திற்கு கல்வி வேண்டாமென்று ஒரு ரூபாய் கூட கொடுக்காதவர் இப்போது எந்த முகத்தோடு இங்கு வருகிறார் ?


ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 21:17

காரியம் ஆகணும்னா காலை மட்டுமல்ல எதையும் பிடிப்பார்கள்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 25, 2025 15:44

அன்று கோபேக் மோடி என்று கருப்பு பலூன் விட்டவர்கள் ..இன்று வெள்ளை குடையுடன் .வரவேற்கும் .ஜால்ரா சத்தம் காதை கிழிகின்றது .. இனி நடனங்கள் ..கரகாட்டம் .. போன்ற சுவாரஷ்ய காட்சிகளை கண்டு களிக்கலாம் ...


சமீபத்திய செய்தி