உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா; அன்புமணி கண்டனம்

அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா; அன்புமணி கண்டனம்

சென்னை: அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; அய்யா வழி என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கிய சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் அவரை முடிவெட்டும் கடவுள் என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டிய அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான முதல் விருப்பவாய்ப்பாக “முடிசூடும் பெருமாள் மற்றும் முத்துக்குடி என்று அழைக்கப்பட்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பில் முடிசூடும் பெருமாள் என்பதை “Vishnu with a crown” என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக 'the god of hair cutting' என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர். இது அய்யா வழியை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.தமிழக அரசின் துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு சாதாரண சொல்லைக் கூட சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத நிலையில் இயங்கி வருவது வருத்தமளிக்கிறது. சுவாமி அய்யா வைகுண்டரை 'the god of hair cutting' என்று குறிப்பிட்டதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

T.sthivinayagam
செப் 01, 2025 21:11

இவர் எப்போது ஆன்மீக கட்சியில் சேர்ந்தார்


sankaranarayanan
செப் 01, 2025 20:50

சுவாமி அய்யா வைகுண்டரை the god of hair cutting என்று குறிப்பிட்டதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும் இதில் என்ன இன்னும் தாமதம் திராவிட மாடல் அரசு உடனே இதை உருவாக்கிய தமிழ் பண்டிதரை வேலையைவிட்டு வெளியே அனுப்ப வேண்டும் வீணான சச்சரவுகளை உண்டு பண்ணின அந்த மனிதர் அரசுக்கு ஒரு பெரிய களங்கம் செய்துவிட்டார் ஆனால் அரசோ வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கிரது


Perumal Pillai
செப் 01, 2025 19:18

கேள்விகள் செட் பண்ணியது தமிழ் மற்றும் இங்க்லீஷ் தெரியாத கோமாளிகள் ஆக இருக்கும் . செம்மொழி தமிழ் போல இது செம் மொழி இங்கிலிஷ்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை