உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்கணும்; மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்கணும்; மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அடக்கவிலை

இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.

லாபம்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும், அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.

ரூ.14 குறைத்திடுக

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பாமரன்
செப் 11, 2024 22:40

என்னடா நம்ம சின்ன டவுசர் கரீட்டா பாயிண்டா சொல்றாப்லன்னு பார்த்தா... கடீசில எண்ணெய் நிறுவனங்கள் மீது கோரிக்கை வக்கிறாப்ல... நம்ம சேக்காளி அரசின் எரிபொருள் அமிச்சர்னு ஒருத்தர் கீறாப்ல... அவராண்ட சொன்னா கோச்சுட்டு அடுத்த தபா பொட்டியை கொறச்சிடுவாங்கன்ற பயம் போல...


T.sthivinayagam
செப் 11, 2024 21:48

சூட்சுமம் தெரியாதவராக இருக்காரு.


K.n. Dhasarathan
செப் 11, 2024 21:21

கடந்த பல வருடங்களாகவே எண்ணெய் நிறுவனங்கள் எந்த ஒரு வரை முறை இல்லாமல் கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. உலக சந்தைக்கு ஏற்ப விலை என்பதெல்லாம் பொய் கதை, உண்மையான விலை பெட்ரோல் 45 ரூபாய் , டீசல் 40 ரூபாய் , காஸ் 455 ரூபாய், மக்களை சுரண்டுவது ஒன்றுதான் வேலை, பெரும் பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி இரண்டாவது வேலை , வேறு எந்த வேலைகளும் கிடையாது.


N Sasikumar Yadhav
செப் 11, 2024 20:43

மாநில அரசை கேட்க தைரியமில்லை


Indian
செப் 11, 2024 18:55

ஒன்னும் குறைக்கண்டா இன்னும் ஐம்பது ரூவா கூட்டணும்


அரசு
செப் 11, 2024 18:34

அப்பா¡ இன்று ஒரு நாள் தான் ஒரு உருப்படியான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.


r ravichandran
செப் 11, 2024 18:29

காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் ப சிதம்பரம் ஒரு லட்சம் கோடிக்கு பெட்ரோல் பாண்ட் விற்பனை செய்து உள்ளார், அந்த பணத்தை முதலீட்டாளர்களுக்கு எப்படி திருப்பி கொடுப்பது என்று அன்புமணி சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன்


chennai sivakumar
செப் 11, 2024 18:21

நமது முதல்வரிடம் கூறி விலையை குறைக்கலாம்


Ms Mahadevan Mahadevan
செப் 11, 2024 17:37

பெட் ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது. அரசின் வெட்டி செலவ்க்கு நிர்மலா பாட்டி எங்கு போவார்? இது பற்றி யாரும் மூச்சு விடக்கூடாது


vadivelu
செப் 11, 2024 17:30

மாநிலம் என்ன செய்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை