உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., அருளின் மாவட்ட செயலர் பதவி பறிப்பு 

பா.ம.க., அருளின் மாவட்ட செயலர் பதவி பறிப்பு 

சென்னை : பா.ம.க.,வில் அப்பா, மகன் இடையிலான மோதலை தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் தொடர்கிறது. ராமதாசின் தீவிர ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க., செயலராக உள்ளார். தைலாபுரத்தில் நேற்று ராமதாஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, பா.ம.க.,வின் இணை பொதுச்செயலராக அருள் செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்தார்.இந்நிலையில் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், சேலம் மாநகர் மாவட்டச் செயலராக சரவணன் நியமிக்கப்படுதாக அறிவித்துள்ளார். இதன் வாயிலாக, அருளின் மாவட்டச் செயலர் பதவியை பறித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை