உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விலை உயரவே ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடா! ராமதாஸ் எழுப்பிய சந்தேகம்

விலை உயரவே ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடா! ராமதாஸ் எழுப்பிய சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; வெளிச்சந்தையில் விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில் தான் கிடைக்கிறதே தவிர, துவரம் பருப்பு விநியோகிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.சென்னையில் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்படவில்லை. நவம்பர் தொடங்கி 22 நாட்கள் ஆகி விட்ட நிலையில், பல நியாய விலைக்கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நியாய விலைக்கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு வழங்குவது சாத்தியமாகாத ஒன்றல்ல. அது மிகவும் எளிதான ஒன்று தான். ஆனால், அதைக் கூட தமிழக அரசால் செய்ய முடியாதது ஏன்? என்பது தான் தெரியவில்லை.நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. லோக்சபா தேர்தல் வந்ததால், பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்ய முடியாததால் தான் தாமதம் ஏற்பட்டதாகவும், இனி தாமதம் ஏற்படாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இப்போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்புக்கான கொள்முதல் ஆணைகள் கடந்த செப்டம்பர் மாதமே வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசே தெரிவித்த பிறகும் கூட நவம்பர் மாதத்தில் பற்றாக்குறை நிலவுவது ஏன்?நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதன் நோக்கமே வெளிச்சந்தையில் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவது தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு முறையாக வழங்கப்படாததால் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.180 ஆக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை இப்போது ரூ.210 ஆக உயர்ந்திருக்கிறது.வெளிச்சந்தையில் பருப்பு விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாய விலைக்கடைகளில் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா? என்பது தெரியவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாய விலைக்கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் ஆகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
நவ 22, 2024 18:49

ஓசி துவரம் பருப்பு. காசு குடுத்து வெளில வாங்கி சாப்புடுங்க.


M Ramachandran
நவ 22, 2024 15:37

ஐயா உங்கள் ஊகம் சரியாக இருந்தாலும் யார் காதிலும் விழாது. இங்கு தாடி கைதடி பெரியாரின் டிராவிடா மாடல் ஆட்சி நடக்குது. வெகு சிறப்பிப்பாக நடக்குதுனு குடியும் கூத்தியா மாக இருப்பவர்கள் சொல்கிறார்கள. அதனால் செவிடன் காதில் ஊதீய சங்கு தான். ஊ ஊ தான்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 22, 2024 15:19

தமிழக அரசு ஆயிரம் ரூபாய் மாதம் முதலிலேயே கொடுத்து விட்டது. தற்சமயம் அது கொண்டு கடைகளில் காசு கொடுத்து வாங்கி உபயோகிக்கவும். பின்னர் அரசு ரேஷன் கடைகளில் தரும் பொழுது அதையும் உபயோகப் படுத்தி கொள்ளலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை