உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூகவலை தள கணக்குகளை மீட்டு தாருங்கள்: டி.ஜி.பி.யிடம் புகார் தந்த ராமதாஸ்

சமூகவலை தள கணக்குகளை மீட்டு தாருங்கள்: டி.ஜி.பி.யிடம் புகார் தந்த ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமது சமூகவலை தள கணக்குகளை மீட்டு தரக்கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் புகார் மனு அளித்துள்ளார்.பா.ம.க.,வில் ராமதாசுக்கும், மகனும், கட்சியின் தலைவரான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு மேலும் மேலும் வலுத்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதும் என அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.லண்டனில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி ஒட்டுக் கேட்புக் கருவியை தமது வீட்டில் யாரோ வைத்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டை ராமதாஸ் கூற பா.ம.க., வட்டாரம் பரபரப்பானது. இருவருக்குமான மோதல், விரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கும் சூழலில், தமது சமூகவலை தள கணக்குகளை மீட்டு தரக் கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் ராமதாஸ் புகார் மனு அளித்துள்ளார்.அதில் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள கணக்கு, முகநூல் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி இருக்கின்றனர். சமூக வலைதள கணக்குகளின் ரகசிய குறியீடுகள் மாற்றப்பட்டு உள்ளன. ஹேக் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, தமது வலைதள பக்கங்களை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V K
ஜூலை 12, 2025 13:11

போக போக தெரியும் ....இந்த மனுஷன் டயலாக் அட நீ கீழ்ப்பாக்கம் போனாலே தெரியும்


Ramesh Sargam
ஜூலை 12, 2025 12:23

இவருக்கு தன்னுடைய பெத்த மகனிடம் உள்ள பிரச்சினைகளையே சரிசெய்துகொள்ளமுடியவில்லை. இவர் அணி தேர்தலில் வெற்றிபெற்று, ஒருவேளை ஆட்சியில் அமர்ந்தால், மக்கள் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பார், எப்படி தீர்வு காண்பார்? நாளுக்கு நாள் இவரின் புலம்பல் சத்தம் அதிகமாக கேற்கிறது.


சூரியா
ஜூலை 12, 2025 11:48

அப்பன் பிள்ளை சொத்து தகறாரில் பஞ்சாயத்து செய்ய இவருக்கு மாநில தலைமை காவல் அதிகாரி வேண்டுமா?


Anand
ஜூலை 12, 2025 11:35

இதைவிட தமிழ்நாட்டை மீட்டு தாருங்கள் என ஒரு புகார் கொடுக்கலாம், உங்களுக்கு புண்ணியமா போகும்.


Anantharaman Srinivasan
ஜூலை 12, 2025 11:34

கட்சி சண்டையென்று நமக்கு show காட்டுகிறார்கள். தேவைக்கு மேல் பணமும் சொத்தும் சேர்த்தால், வயதான காலத்தில் நிம்மதியில்லாமல் தினமும் புலம்பத்தான் வேண்டும்.


சமீபத்திய செய்தி