உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: 'பா.ம.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்னைக்கும், பா.ஜ.,விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் அவர் நாகேந்திரன் கூறியதாவது: ராணிப்பேட்டையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0cl6zmel&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் தற்போது முழுக்க, முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. போலீசார் சரியாக எங்கேயுமே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் மார்தட்டி பேசுகிறார். இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானை உள்ளது. அதை நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள். விதிமுறைகளை பின்பற்றி முதல்வரிடம் பேசி யானைகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி மோதலுக்கு பின்னால் பா.ஜ., இருக்கிறது என்று கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:இது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பா. ஜ., விற்கும், பா.ம.க.,வின் உட்கட்சி பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தொடர்பும் கிடையாது பின்னணியும் கிடையாது. இது முழுக்க.முழுக்க அவரது உட்கட்சி பிரச்னை அதைப்பற்றி கருத்து கூறவும் முடியாது. உட்கட்சி பிரச்னைகளில் நாம் தலையிடுவது சரியானதாகவும் இருக்காது என்றார். அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் யார் என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், அதை இ.பி.எஸ்., இடம் தான் கேட்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

துர்வேஷ் சகாதேவன்
மே 30, 2025 17:55

மஹாராஷ்டிராவில் ஷிண்டே கதை தான் இங்கே PMK வில் , கூட்டணிக்கு வரவில்லை என்றால் கட்சி உடைப்பு , இன்னும் கொஞ்ச நாள் ..


madhesh varan
மே 30, 2025 17:27

இப்டித்தாண் அதிமுகாவை உடைச்சிங்க, இப்போ பாமக, அதிமுகவை உடைச்சாச்சு, பாமகவை பிரிச்சாச்சு, திமுகவை ஈ டி யவச்சு மிரட்டியாச்சு, இதெல்லாம் சங்கிகளின் வேலை இல்லையா ?


P. SRINIVASAN
மே 30, 2025 16:35

நாங்க நம்பிட்டோம் நாகேந்திர ...


சங்கேஷ்
மே 30, 2025 16:16

நீங்க உள்ளே புகும் முன்னாடியே இப்பிடி. பூந்துட்டா சங்கு தான்.


Kasimani Baskaran
மே 30, 2025 15:46

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல இருக்கிறது.. ஆமை தாஸ் தீம்காவுடன் உடல் செய்ததில் பஞ்சமி நில தகவலை வெளியே சொன்னார்.