உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிக்கு பாலியல் தொல்லை 3 மாணவர்கள் மீது போக்சோ

மாணவிக்கு பாலியல் தொல்லை 3 மாணவர்கள் மீது போக்சோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆத்துார்: ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயதுடைய, மூன்று மாணவர்கள், ஜன., 22 மாலை, 7ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.கடந்த, 10ல், மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி எண்ணில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரிக்க, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், ஆத்துார் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் நேற்று அளித்த புகார்படி, மூன்று மாணவர்கள் மீது போக்சோ வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.

போலீசார் கூறியதாவது:

பள்ளி முடிந்து கழிப்பறைக்கு சென்ற மாணவியை, அதே பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். ஆசிரியர்களுக்கு தகவல் தெரிந்தும், அவர்கள் போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை. உதவி எண்ணுக்கு புகார் சென்ற பின், போக்சோ வழக்கு பதிந்து இரு மாணவர்களிடம் விசாரித்துள்ளோம். மற்றொரு மாணவரை விசாரணைக்கு ஆஜர்படுத்த, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளோம். விசாரணை முடிந்த பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
பிப் 13, 2025 11:08

Atleast 50% Complainta/Cases are False But Vestedly Encouraged/Cookedup by Case/ Vote/News/Power Hungry Criminal Groups


RAMAKRISHNAN NATESAN
பிப் 13, 2025 10:11

மாணவர்களின் பெயர்கள் என்னவோ?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 13, 2025 13:20

பெயர் குறிப்பிட்டால் உங்களுக்கு காரணம் தெரிஞ்சிரும் .... அதனால குறிப்பிட மாட்டோம் .....


N VADIVEL
பிப் 13, 2025 10:04

மாணவிகள் இடை நிற்றலுக்கு பாலியல் தொல்லையும் ஒரு காரணம் . பள்ளியில் இருந்து திடிரென்று படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிகளைகயும் ரகசியமாக விசாரிக்க வேண்டும்.


Kasimani Baskaran
பிப் 13, 2025 07:55

குற்றச்செயல்களை அறிந்தும் நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை தலைமை செயலகத்துக்கு ... அனுப்பி வைத்து விடலாம். உடல், மனதளவில் இன்னும் அறியாத பருவத்தை தாண்டாத பிள்ளைகளுக்கு இது போல துன்புறுத்தல் அவர்களை மனநோயாளியாக்கிவிடும். பாலியல் கல்வி பள்ளிகளில் முறையாக போதிக்கப்பட வேண்டும். பெற்றோரும் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும்.


புதிய வீடியோ