மேலும் செய்திகள்
டூவீலர் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
12-Aug-2025
தாளாளரின் மகன் சிக்கினார் பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே அழகாகவுண்டனுாரில், தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி தாளாளரின் மகன் விணுலோகேஸ்வரன், 33, ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார். விணுலோகேஸ்வரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். புகாரின்படி, பென்னாகரம் மகளிர் போலீசார் விணுலோகேஸ்வரனை போக்சோவில் நேற்று கைது செய்தனர். சிறுமிக்கு 4 மாத குழந்தை தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை. சிறுமியின் உறவினர், கம்பம் அண்ணாபுரம் கே.கே.பட்டி சுரேஷ் பாண்டி, 23. இவர் சிறுமியை காதலிப்பதாக கூறி, 2024 ஜூனில் திருமணம் செய்தார். தற்போது, சிறுமிக்கு நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. தகவலறிந்த கம்பம் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி புகாரின்படி, சுரேஷ்பாண்டி மீது உத்தமபாளையம் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Aug-2025