மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
51 minutes ago
மயிலாடுதுறை: லோக்சபா தேர்தலால், நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து, மயிலாடுதுறை எம்.எல்.ஏ., அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.சீல் வைக்கப்பட்ட அலுவலகத்தின் பக்கவாட்டு கதவு வழியாக, நேற்று முன்தினம் இரவு, காங்., - எம்,எல்,ஏ., ராஜ்குமார் உள்ளே சென்று, அலுவலக வளாகத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதுடன், ஆதரவாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து உபசரித்தார். பட்டமங்கலம் வி.ஏ.ஓ. பாலாஜி மயிலாடுதுறை போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்படி, எம்.எல்.ஏ., ராஜகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி உள்ளே நுழைந்து விழா நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
51 minutes ago