உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைபர் குற்றவாளிகளை கண்காணிக்க தனி செயலி உருவாக்கியது போலீஸ்!

சைபர் குற்றவாளிகளை கண்காணிக்க தனி செயலி உருவாக்கியது போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பண மோசடிக்கு முயற்சிக்கும் போதே, 'சைபர்' குற்றவாளிகளை கண்டுபிடிக்க, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இணையவழியில் பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், பெரும்பாலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களை கைது செய்வது, போலீசாருக்கு சவாலாக உள்ளது. இதனால், பண மோசடிக்கு முயற்சிக்கும் போதே, அவர்களை கண்காணிக்க, சைபர் குற்றப்பிரிவு போலீசார், மொபைல் போன் செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சைபர் குற்றவாளிகள், மொபைல் போன், கணினி மற்றும் செயலிகள் வாயிலாக பண மோசடி செய்கின்றனர். அவர்களின் பணப்பரிமாற்றமே சந்தேகப்படும்படியாக இருக்கும். இந்தியா முழுதும் இத்தகைய சைபர் குற்றவாளிகள் குறித்த தரவுகள், போலீசாரிடம் உள்ளன. அவர்களின் வங்கி கணக்குகள், சமூக வலைதள கணக்குகள், இ - மெயில் முகவரிகள், மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட விபரங்களும் உள்ளன.அவற்றின் அடிப்படையில், அவர்களை கண்காணிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், பல மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகளின் விபரங்களும் உள்ளன. சைபர் குற்றவாளிகள், ஆன்லைன் வாயிலாக பண மோசடிக்கு முயற்சி செய்யும் போதே, அந்த செயலி வாயிலாக, எங்களுக்கு தகவல் கிடைத்து விடும். அவர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்ற விபரத்தையும் அறியலாம். இதன் வாயிலாக, குற்றங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை