உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

கோவை;கோவை, பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கோவை மாநகர், பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக ( சட்டம்- ஒழுங்கு) பணியாற்றி வந்தவர் நடேசன்,48; சுந்தராபுரத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார். இவரது சொந்த ஊர், தேனி மாவட்டம், சின்னமனுார் அருகேயுள்ள சீலையம்பட்டி. இவரது மனைவி சக்தி மற்றும் மகள்கள் ஓவியா, இனியா சொந்த ஊரில் வசிக்கின்றனர். மூத்த மகள் ஓவியா, இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம், இனியா பிளஸ் 2 படித்து வருகின்றனர். நடேசன் அவ்வப்போது, விடுப்பு எடுத்து, குடும்பத்தினரை பார்க்க சொந்த ஊர் சென்று வருவது வழக்கம். இவரது மகள் ஓவியா பிறந்த நாளை கொண்டாட, இரண்டு நாள் விடுப்பில் நேற்று ஊருக்கு சென்றார். வீட்டிலிருந்த போது இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மரணம் அடைந்த நடேசன், 1999 ல் எஸ்.ஐ., யாக காவல் துறையில் சேர்ந்த இவர், கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி கிழக்கு மற்றும் டவுன், போத்தனுார் உட்பட பல்வேறு ஸ்டேஷன்களில் ஐந்தாண்டுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை