உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்.எல்.சி., ஊழியர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

என்.எல்.சி., ஊழியர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

நெய்வேலி: என்.எல்.சி., ஊழியர் வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெய்வேலி வட்டம் 10ல், புல்லாங்குழல் வீதியை சேர்ந்தவர் மோகன், 51; என்.எல்.சி., முதல் சுரங்கம் - லிக்னைட் பெஞ்சில் நிரந்தர ஊழியர். இவரது மனைவி கலைவாணி.41. இவர்களுக்கு பிரவீனா.21 மற்றும் நவீன்.19. ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.மோகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மோகன் மட்டும் என்.எல்.சி., குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் மோகன் தொடர்ந்து குடித்து வந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், வீட்டின் கதவை உடைத்து, மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் குடிப்பழக்கத்தினால் இறந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 08, 2024 12:02

என்.எல்.சி.யில் பணிபுரியும் பல ஊழியர்கள் குடித்து கெட்டவர்கள். குடித்து கெட்டுக்கொண்டிருக்கிறார்கள். என்.எல்.சி. நிர்வாகம் ஊழியர்கள் குடிப்பதை நிறுத்த வாரத்திற்கு ஒருமுறை கவுன்சலிங் செய்து அவர்கள், மற்றும் அவர்கள் குடும்பத்தினரை காப்பாற்றவேண்டும்.


Ramesh Sargam
நவ 08, 2024 12:02

என்.எல்.சி.யில் பணிபுரியும் பல ஊழியர்கள் குடித்து கெட்டவர்கள். குடித்து கெட்டுக்கொண்டிருக்கிறார்கள். என்.எல்.சி. நிர்வாகம் ஊழியர்கள் குடிப்பதை நிறுத்த வாரத்திற்கு ஒருமுறை கவுன்சலிங் செய்து அவர்கள், மற்றும் அவர்கள் குடும்பத்தினரை காப்பாற்றவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை