உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுயமுகவரியை இழந்த காவல்துறை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சுயமுகவரியை இழந்த காவல்துறை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போலீஸ் துறை சுய முகவரி இழந்து சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது எல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த தெரியாத ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக தினமும் செய்திகள் வருகின்றன.ரூட் தல பிரச்னை துவங்கி, மாணவனுக்கு வெட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. தமிழக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இரவு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார்களின் கையை விட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஓங்கி இருக்கின்றன. சமூக விரோதிகளை ஒடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறை சுய முகவரி இழந்து சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழக போலீசுக்கு இனி முழு சுதந்திரம் வழங்கி சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
மே 30, 2024 20:09

பழய அம்மா புகழ் MGR புகழ் வேலைய்யக்கு ஆகாது. உனக்குள் ஜெயகுமார் உங்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார். உங்களால் அவரைய்ய கட்டு படுத்த இயலவில்ல்லை. பரிதாபம்


M Ramachandran
மே 30, 2024 20:06

கொள்கையில்லா கட்சி தலையில்லா கட்சியை போன்று


M Ramachandran
மே 30, 2024 20:05

ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு பழனி உஙகள் முக வரி தொலையாமல் பார்த்து கொள்ளுஙகள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை